பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி.


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபோலை கிளையினால் (04-11-2018ல் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி
வரை பெண்களுக்கான மார்க்க விளக்க தர்பியா நிகழ்ச்சி மாபோலை ஜும்மா பள்ளி திருமண வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 சிறப்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்வை SLTJ மாபோலை கிளை இமாம் மெளலவி தன்ஸீல் அவர்கள் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நிப்ராஸ் நத்வி அவர்கள் "ஏகத்துவ வளர்ச்சியில் பென்களின் பங்கு" எனும் தலைப்பில் உரையாற்றினார்.

 அடுத்த நிகழ்வாக "முஃமினின் ஒரு நாள் வாழ்வு" எனும் தொனிப்பொருளில் ஆலிமா ரிஹானா இப்றாஹீம் அவர்களால் ஒரு முஃமின் தனது அன்றாட வாழ்வை எவ்வாறு கட்டமைக் வேண்டும் என்பது பற்றி அழகான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

இரண்டாம் அமர்வில் சகோதரி பைரூஸியா இப்றாஹீம் அவர்கள் சமூகத்திற்கு அவசியாம ஒன்றான ஜனாஸா குளிப்பாட்டல் மற்றும் கபனிடுதல் செயல்முறை விளக்கமளித்ததுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தினார்.

தர்பியாவின் இறுதி நிகழ்வாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் கோவை R ரஹ்மதுல்லாஹ் MIsc அவர்கள் "சமூக வலை தளங்களில் சீரழியும் பெண்கள்" எனும் கருப்பொருளில் காலத்திற்கு தேவையான அம்சங்களை உள்ளடக்கி ஆன்லைன் வழியாக உரை நிகழ்த்தினார்.

அதிகமான தாய்மார்களும், சகோதரிகளும் கலந்து சிறப்பித்த தர்பியா நிகழ்ச்சி இறை அருளால் சிறப்பாக நடபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி. பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி. Reviewed by Madawala News on November 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.