இந்தியாவில் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரயில் மோதி 50 பேருக்கு மேல் பலி. பலர் காயம்.

இந்தியாவில் இன்று தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்டது.

அப்போது எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதுடன், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் 

இன்று  வெள்ளிக்கிழமையன்று சுமார் ஆறரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமிர்தசரசுவின் இணை ஆணையர் கமல்ஜீத் சிங் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

தோபி கேட் அருகில் ராவண உருவ பொம்மையை எரித்த போது,  அந்த இடத்திற்கு அருகில் ரயில் பாதை இருந்தது. அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள்   ரயில் வந்ததில் அதில் அடிபட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தியாவில் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரயில் மோதி 50 பேருக்கு மேல் பலி. பலர் காயம். இந்தியாவில் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரயில் மோதி 50 பேருக்கு மேல் பலி. பலர் காயம். Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.