மர்ஹூம் அஷ்ரப் வாழ்ந்த இடங்கள் அடையாளங்கலாக்கப்பட வேண்டும்.


முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவ முகவரி தந்து விட்டு ,எம்மை விட்டுப்பிரிந்த பெருத்தலைவர்
MHM ASHRAFF அவர்களின் நினைவாக ஆண்டண்டு காலம்  "நினைவுபடுத்தல்" நிகழ்வுகள் அரசியற் கட்சிகளாலும், நலன்விரும்பிகளாலும், நடத்தப்பட்டு வருகின்றன

நினைவிறக்கம்,.....

ஆரம்ப காலத்தில் எல்லா ஊர்களிலும் நினைவு நிகழ்வுகள்  நடத்தப்பட்டு வந்த வேகம் இப்போது சற்றுக் குறைவடைந்து, .. ஒரு சில ஊர்களுக்குள்ளும், கட்சிகளுக்கும், நபர்களுக்குமிடையே வெறும் "பேச்சுக் கூட்டங்களாக மட்டும் " சுருக்கப்பட்டு விட்டது.. இது அவரது நினைவுகளில் இருந்தும் , கனவுகளில் இருந்தும், இன்றைய கட்சிகளின் விலகிச்  செல்லல் போக்கினையே காட்டுகின்றது.

முக்கிய வருடம்,

வழமையான நினைவு ஆண்டுகளை விட இவ்வாண்டு மிக முக்கியமானது, காரணம் "அஸ்ரஃப் என்ற ஆளுமையை அறியாத ஒரு இளம் சமுதாயம் இன்று தமது 18 வயதினைப்பூர்த்தி செய்து அரசியல் அரங்கிற்குள் பிரவேசிக்கின்றனர்..

இது இன்னும் சில ஆண்டுகளில் இவ்வாறான நினைவுகள் இன்னும்  குறைவடைந்து  செல்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது, மட்டுமல்ல, இன்றைய தலைமைத்துவங்களும் அதனை ஊக்குவிப்பர் காரணம், பெருந்தலைவரின் நினைவுகளில் இருந்து சமூகத்தை, இன்றைய தமது புகழைப்பாட வைக்க வேண்டிய உள்ளார்ந்த விருப்பமும், அதற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன...

நிரந்தர நினைவூட்டல்.

இந்த வகையில் அஸ்ரஃப் என்ற பெரும் ஆளுமையினை நிரந்தர மாக நினைவு படுத்தக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அவ்வாறான, நினைவுகளும், சாதனைகளும் எம் இளம் சமுதாயத்தினரின் ஆளுமை  முன்னேற்றத்தில் அதிக செல்வாக்கினைச் செலுத்துவது மட்டுமல்ல, சமூகத்திற்காக தம்மை அர்ப்பணிக்கும் சிறத்த தலைமைத்துவப் பண்பையும் வளர்க்கும்,

என்ன செய்யலாம்,.....??

அஸ்ரஃப் அவர்கள்   2000 மாம் ஆண்டு எம்மை விட்டுப்பிரிந்திருந்தாலும் அவர் வாழ்ந்த இடங்கள் இன்றும் அவரது ஞாபகார்த்தமாக உள்ளன,,

அந்த வகையில் அவர் திருமணத்திற்கு முன்னர் வாழ்ந்த கல்முனை பிரதான வீதியில் உள்ள வீடும், திருமணத்தின் பின்னர் குடும்பமாக வாழ்ந்த கலமுனை Towns Area வில் உள்ள அம்மன் கோவில் வீதியில் உள்ள " ஹிறா" இல்லமும், மிக முக்கியமானவை, அதிலும் இந்த HIRAH HOUSE. அவரது வாழ்வில் பல்வேறுபட்ட திருப்பங்களுக்கு அடிப்படையாக அமைந்த இடமகும்,
அதேபோல் அவரது ஓய்வுகாலத்தில் வாழ்வதற்காக அவரால் கட்டப்பட்ட ஒலுவில் தோட்ட வீடும் முக்கியமானதாகும்,

அந்த வகையில் இவற்றில் ஏதாவது ஒன்றோ, அல்லது இவை  மூன்றுமோ, நிரந்தர நினைவிடமாக்கப்பட்டு, சமூகத்தின் பிரயோசனமான பாவனைக்கான பொது இடங்களாக்கப்பட வேண்டும், அதற்கான செலவுகளையும் ஏற்பாடுகளையும், தமக்கு " எல்லாம் தந்த" தலைவனால் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சித்தலைவர்கள், குறிப்பாக இன்றைய SLMC தலைவர் றவூப் ஹக்கீம் இதனை முன்னின்று மேற்கொள்ள வேண்டும், இல்லாவிடின் இவ் இடங்கள்  பிறரின் கை மாறிச் செல்வது மட்டுமல்ல, ஒரு சமூகத்திற்கு உரிமை பெற்றுத்தந்த தலைவனுக்கு, அவர் வாழ்ந்த ஊரில் ஒரு அங்குல நிலமும் இல்லாமல் அவரை  அனாதை  ஆக்கியதாகி விடும்

கண்டி மக்களின் கண்ணீர்....

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முன்னோடி அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் வாழ்ந்த வீட்டை இழந்து விட்டு இன்று கண்டி முஸ்லிம்கள் கண்ணீர்வடிப்பதைப்போல, அஸ்ரஃப் அவர்கள்  வாழ்ந்த இடங்களைக்கூட காப்பாற்ற முடியாமல் கிழக்கு சமூகம் எதிர்காலத்தில் வருந்துவதை இவ்வாறான முயற்சிகளின் மூலம் தடுக்க முடியும்,

எனவேதான், போலிச் சாட்டிற்கான நினைவேந்தல்களை ஏற்படுத்தி அரசியல் சாயம் பூசி, முதலைக்கண்ணீர் வடிப்பதை விட்டு விட்டு ஒரு மா தலைவன் வாழ்ந்த இடங்களையும், அவரது உண்மையான கனவுகளையும் காக்க இன்றைய தலைவர்களும், நலன் விரும்பிகளும் முன்வர வேண்டும் என்பதுடன் , அதற்கான அழுத்தங்களை அஸ்ரஃ்பின் மீது ஆர்வமுள்ள பொதுமக்கள்  தெரிவிக்க வேண்டும் என்பதே, இன்று எம் அனைவர் மீதுமுள்ள பாரிய பொறுப்பாகும்.

முபிஸால் அபூபக்கர்.
16:09:2018
மர்ஹூம் அஷ்ரப் வாழ்ந்த இடங்கள் அடையாளங்கலாக்கப்பட வேண்டும். மர்ஹூம் அஷ்ரப்  வாழ்ந்த இடங்கள் அடையாளங்கலாக்கப்பட வேண்டும். Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5