கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை இரட்டிப்பாக அதிகரிக்க மேயர் ரோசி யோசனை முன்வைத்தார்..



கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என தான் யோசனை முன்வைத்தாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டார்.

தற்போது  மாதாந்தம் 20000 கொடுப்பானவாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட போதும் அது அவர்களின் சமூக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமானதல்ல என அவர் குறிப்பிட்டார்.

கொடுப்பனவு அதிகரிப்பு சுமையை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டிய தேவை இல்லை எனவும் மாநகர சபைக்கு 20’பில்லியன் மாத வருமானம் இருப்பதாகவும் அந்த  வருமானத்தில் அதனை ஈடு செய்ய  முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த  கொடுப்பனவுத் தொகையை
அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை 20,000 ரூபாயிலிருந்து, 45,000 ரூபா வரை அதிகரிக்க, நிதி தொடர்பான நிலையியற் குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்குவற்காக ஒதுக்கப்பட்ட நிதி 23 இலட்சம் ரூபாயிலிருந்து, 45 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட, 119 உறுப்பினர்களின் கொடுப்பனவே இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை இரட்டிப்பாக அதிகரிக்க மேயர் ரோசி யோசனை முன்வைத்தார்.. கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை இரட்டிப்பாக அதிகரிக்க மேயர் ரோசி யோசனை முன்வைத்தார்.. Reviewed by Madawala News on August 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.