மாகாண‌ ச‌பைக‌ளுக்கான‌ எல்லை நிர்ண‌ய‌ அறிக்கை தான் பாராளும‌ன்ற‌த்தில் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டது.. ஆனால் புதிய‌ முறைப்ப‌டியே தேர்த‌ல் ந‌ட‌த்துவ‌து என்ற‌ விட‌ய‌ம் இன்ன‌மும் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌வில்லை.


மாகாண‌ ச‌பைக‌ளுக்கான‌ எல்லை நிர்ண‌ய‌ அறிக்கை பாராளும‌ன்ற‌த்தில் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டாலும்
புதிய‌ முறைப்ப‌டியே தேர்த‌ல் ந‌ட‌த்துவ‌து என்ற‌ விட‌ய‌ம் இன்ன‌மும் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌வில்லை என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து,
எல்லை நிர்ண‌ய‌ அறிக்கை த‌யாரித்த‌ல், அத‌னை பாராளும‌ன்றுக்கு கொண்டு வ‌ந்து தோற்க‌டித்த‌ல், அத‌ன் மூல‌ம் தேர்த‌லை பிற்போடுவ‌து என்ப‌தெல்லாம் நாட்டு ம‌க்க‌ள் ஏற்க‌ன‌வே தெரிந்த‌ விட‌ய‌ம்தான்.

மேற்ப‌டி அறிக்கை தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தால் பிர‌த‌ம‌ர் ர‌ணில் த‌லைமையிலான‌ குழுவிட‌ம் இது ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டு திருத்த‌ம் ந‌டை பெறும். அப்போதும் தொகுதிக‌ள் அதிக‌ரிப்பு ந‌டை பெறாம‌ல் க‌ண்ணாமூச்சியாக‌ சில‌ எல்லைக‌ள் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌டும் என்ப‌தே உண்மை.

பிர‌த‌ம‌ரிட‌ம் இந்த‌ அறிக்கை செல்வ‌தால் எவ்வாறு திருத்த‌ம் ந‌டைபெற‌ வேண்டும் என்ற‌ கோரிக்கைக‌ளை சிறுபான்மை க‌ட்சிக‌ள் முன் வைக்க‌ வேண்டும்.

ஆனாலும் இந்த‌ எல்லை நிர்ண‌ய‌ அறிக்கை ப‌ற்றி அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா ப‌ல‌ த‌ட‌வை ப‌கிர‌ங்க‌மாக‌ விள‌க்க‌ம‌ளித்தும் அத‌னை பிர‌த‌ம‌ர் க‌வ‌ன‌த்துக்கு கொண்டு வ‌ந்து சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு பாதிப்பின்றி தொகுதிக‌ள் உருவாக்க‌வும் எல்லைக‌ள் இட‌வும் ஏன் சிறுபான்மை க‌ட்சிக‌ளால் முடியாம‌ல் போன‌து என்ப‌துதான் விசித்திர‌மாக‌ உள்ள‌து. இத்த‌னைக்கும் இந்த‌ ஆட்சியின் சார‌தியும் நாமே ந‌ட‌த்துன‌ரும் நாமே என்ற‌ ஹ‌க்கீம் இப்போது வ‌ண்டியின் கீழ் ந‌சுங்கிய பிராணி போன்று அல‌றிக்கொண்டிருக்கிறார்.
எம்மை பொறுத்த‌ வ‌ரை பின் வ‌ரும் கேள்விக‌ளுக்கான‌ ப‌தில்க‌ளுக்கான‌ ப‌திலை பாராளும‌ன்ற‌த்தை பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தும் கட்சிக‌ள் ம‌க்க‌ளுக்கு தெளிவு ப‌டுத்த‌ வேண்டும்.

மாகாண‌ ச‌பைக‌ளுக்கான‌ எல்லை நிர்ண‌ய‌ம் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ போது பிர‌த‌ம‌ரைக்கொண்ட‌ ஐ தே க‌வுக்கு தெரியாதா?

இந்த‌ அறிக்கை பிர‌த‌ம‌ருக்கும் தெரியாம‌ல் இர‌க‌சிய‌மாக‌ த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தா?

இது த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ போது ம‌னோ க‌ணேச‌னும் ர‌வூப் ஹ‌க்கீமும் தூங்கிக்கொண்டிருந்தார்க‌ளா?
அவ‌ர்க‌ள்தானே ர‌ணிலின் நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ர்க‌ள்.

 எல்லை நிர்ண‌ய‌ அறிக்கை த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ போது ஏன் இவ‌ர்க‌ள் ர‌ணிலிட‌ம் பேசி இதில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ப்ப‌ட‌வில்லை?

- உல‌மா க‌ட்சி
மாகாண‌ ச‌பைக‌ளுக்கான‌ எல்லை நிர்ண‌ய‌ அறிக்கை தான் பாராளும‌ன்ற‌த்தில் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டது.. ஆனால் புதிய‌ முறைப்ப‌டியே தேர்த‌ல் ந‌ட‌த்துவ‌து என்ற‌ விட‌ய‌ம் இன்ன‌மும் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌வில்லை. மாகாண‌ ச‌பைக‌ளுக்கான‌ எல்லை நிர்ண‌ய‌ அறிக்கை தான் பாராளும‌ன்ற‌த்தில் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டது.. ஆனால் புதிய‌ முறைப்ப‌டியே தேர்த‌ல் ந‌ட‌த்துவ‌து என்ற‌ விட‌ய‌ம் இன்ன‌மும் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌வில்லை. Reviewed by Madawala News on August 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.