90 வருடகால வரலாற்றை கொண்ட காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலத்தின் நடைபவனி மற்றும் கெளரவிப்பு நிகழ்வு..


(பஹ்த் ஜுனைட்)
90 வருடகால வரலாற்றை கொண்ட காங்கேயனோடை அல் அக்ஸா மகா  வித்தியாலத்தின் பழைய
மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்   24.08.2018 வெள்ளிக்கிழமை அன்று  காங்கேயனோடை பிரதான வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பழைய மாணவர்கள் நடைபவனி குவைட் சிட்டி ஊடாகச் சென்று பாடசாலை பிரதான மண்டபத்தை அடைந்தது.

இந் நிகழ்வுகள் பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலை அதிபருமான அஷ்ஷேய்ஹ் M. அப்பாஸ்(நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது..

90 வருட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் இணைத்து இடம்பெற்ற நடைபவனி மற்றும் கெளரவிப்பு நிகழ்வுகள் இப்பிரதேச மக்களின் வரலாற்றுச் சாதனையாகும்.

இவ்வாரான நிகழ்வின் மூலமாக பழைய மாணவர்களை கொண்டு பாடசாலை தற்போதைய மாணவர்களின் கல்வி மேம்பாட்டு மற்றும் பாடசாலை பெளதீக வளத்தை பெற்றுக்கொள்ளல் போன்ற நோக்கத்திற்காக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

மேற்படி நிகழ்வு AL - AQSHA WALK TOWARDS THE GOAL என்ற தொனிப்பொருளில் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
90 வருடகால வரலாற்றை கொண்ட காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலத்தின் நடைபவனி மற்றும் கெளரவிப்பு நிகழ்வு.. 90 வருடகால வரலாற்றை கொண்ட காங்கேயனோடை அல்  அக்ஸா மகா வித்தியாலத்தின் நடைபவனி மற்றும் கெளரவிப்பு நிகழ்வு.. Reviewed by Madawala News on August 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.