ஏறாவூர் பற்றுக் கிராமத்தில் 29 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சஜித் பிரேமதாசவினால்கை யளிக்க்பபட்டன.


(அஷ்ரப் ஏ சமத்)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஏறாவூர் பற்றுக் கிராமத்தில்  106வது மாதிரிக் கிராமமான விருட்சம் வீடமைப்புக் கிராமம் கடந்த திங்கட் கிழமை(12) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இவ் வீடமைப்புக் கிராமத்தில் 29 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்க்பபட்டன.

அத்துடன் அரச காணிகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 போ்ச் காணிகள் வழங்கப்பட்டன்.  அத்துடன் இவ் வீடமைப்புக் கிராமத்தில் பழச்செய்கை வீட்டுத்தோட்டம் செய்வதற்காக காணிகள் வழங்கப்பட்டன.

 இதற்காக பயிற்சிகளையும் தேசிய வீடமைபபு அபிவிருத்தி அதிகார சபையின் பச்சை நிலம் எனும் கிராம சக்தித் திட்டமும் பயிற்சியளிக்கப்பட்டது.  அத்துடன் இவ் வீடமைப்புத்திட்டத்தில் குடிநீர், மின்சாரம், உள்ளக பாதைகள் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  

மேலும் 200 குடும்பங்களுக்கு 20 மில்லியன் ருபா வீடமைப்புக் கடன், சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் இளைஞா் யுவதிகளக்கு கிராமிய அபிவிருந்தி வங்கியின் ஊடக கடன் திட்டம் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது,

  இங்கு உரையாற்றிய அமைச்சா் சஜித் பிரேமதாச,
 மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் எதிா்வரும் 2020 வரைக்குள்  200 வீடமைப்புக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

 ஏற்கனவே 1000 கிராமங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு நாடு முழுவதிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.  இத் திட்டத்திற்கு எதிா்க் கூட்டணியினரையும் சோந்து உதவுமாறு அழைப்பு விடுத்தா்ா.

எதிாவரும் அரசாங்கத்தின் ஆட்சியை இதே ஆட்சியே வெற்றி பெரும் எனத் தெரிவித்தாா்.  முன்னைய ஆட்சியினா் ஹிந்து மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை உடைத்தவா்கள் தற்பொழுது ஆட்சிக்காக சிறுபான்மையினத்தவரின் முதலைக் கண்னீா் வடிக்கின்றனா்  எனவும் அமைச்சா் சஜித் பிரேமதாசா அங்கு தெரிவித்தாா்.

இந் நிகழ்வில் பிரதியமைச்சா்களான  அமீா் அலி, அலி சாஹிா் மொலாளா் மட்டக்களப்பு மாவட்ட ரீ.என். ஏ பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.


ஏறாவூர் பற்றுக் கிராமத்தில் 29 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சஜித் பிரேமதாசவினால்கை யளிக்க்பபட்டன. ஏறாவூர் பற்றுக் கிராமத்தில் 29 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சஜித் பிரேமதாசவினால்கை யளிக்க்பபட்டன. Reviewed by Madawala News on August 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.