இன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்.


(ஆக்கம் : சமீன் முஹம்மட் சஹீத் - நிந்தவூர்)
இன்றைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில்
தேவையற்றதாகினும் இன்றியமையாத ஓர் அங்கமாக இந்த சமூக வலைத்தளங்கள் மற்றும் சினிமா  உருவெடுத்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலமாக கிடைக்கின்ற நண்மைகளை விட தீமைகளே அதிகமாக கானப்படுகின்ற நிலமை தோற்றம் பெற்றுள்ளமையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவையாகவே உனரப்படுகின்றது.

நேரத்தை மீதப்படுத்த கண்டு பிடிக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களே மனிதர்களின் நேரத்தை வீணடிக்கும் பிரதான காரணியாக மாற்றம் பெற்றுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

எந்தவொரு கண்டுபிடிப்பாக இருப்பினும் அதனால் நண்மையை விளைவிக்கவும் முடியும் தீமையை விளைவிக்கவும் முடியும் என்பது தவறு. கண்டுபிடிப்புக்களோ சாதனங்களோ அவையாகவே தொழிற்பட்டு மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை மாறாக அவற்றை பயன்படுத்தும் பாவனையாளர்களின் உள நிலைகளுக்கு ஏற்பவே அவை பயன்படுத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் நிகழ்வுகளை சரியாக செய்து முடிக்க வேண்டுமென நினைத்த நாம்தான் இன்று புகைப்படங்கள் நன்றாக வந்தால் போதும் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். அன்று நிகழ்வுகளை நியாபகமூட்ட புகைப்படமெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன ஆனால்  இன்றோ புகைப்படமெடுக்கவே நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

ரசனை உணர்வுகள், மகிழும் தருணங்கள், முக மலர்ச்சி போன்ற உள மகிழ்வுகள் எல்லாமே இன்று புகைப்படக்கருவிகளுக்கு முன்னால் மட்டுமே என்று மட்டுப்படுத்தப் பட்டு விட்டது. அயலவர்களை அறிந்து கொள்ளாத உறவுகள் அயல்நாட்டு ஆயிரம் உறவுகளை தேடுகின்றனர்.

மித மிஞ்சிய சமூக வலைத்தள பாவனை மூலம் தங்களை தாங்களே அழித்துக் கொள்வது மட்டுமல்லாமல் உண்மை அறியாது செய்யப்படும் பகிர்வுகள் மூலம் அடுத்தவர்களையும் மன உளைச்சல்களுக்கு உட்படுத்தி அவர்களது வாழ்க்கையுயும் நாசமாக்கும் காரியங்களையும் செய்துவிடுகின்றனர்.

குறிப்பாக பெண்கள் தங்கள் தங்களது பெற்றோர், சகோதரர்கள் மற்றும்  கணவரிடம் பகிர்ந்து கொள்ளாத விடயங்களை கூட முக நூல் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர். முகநூல்களில் பெண்களை தேடும் ஆண்களோ பெண்களின் காவலாளிகள் அல்ல காவாளிகளே என்பதை இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்த பின்னரே இவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

இளைஞர்களையும் சிறுவர்களையும் பாதித்துள்ள அடுத்த பிரதானமான காரணிதான் இந்த சினிமா துறை. திரைப்படங்களை திரைப்படங்களாக வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்கின்ற வரை அதில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை ஆனால் இன்று பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களாக தங்களை ஒப்பிட்டு பார்க்க முனைவதுதான் மாபெரும் விபரீதங்களை ஏற்படுத்துகிறது.



காதலுக்காக தற்கொலை செய்து கொள்ளல், நட்புக்காக தற்கொலை செய்து கொள்ளல், பிரச்சனைகளின் தீர்வுக்காக தற்கொலை செய்து கொள்ளல் போன்ற பிழையான வழிகாட்டல்களை வழங்குவதில் திரைப்படங்கள் முன்னிலை வகுப்பதில் என்றும் பின்னிற்பதில்லை.

சினிமா என்பது அந்த துறையில் இருப்பவர்கள் தவிர அடுத்தவர்களுக்கு வாழ்க்கையில்லை. ஏன் சினிமாகாரர்களுக்கு கூட அது வாழ்வாதாரத்துக்கு பங்களிப்பு செய்யுமே தவிர நிஜ வாழ்க்கைக்கு அல்ல. முட்டாள்தனமான இளைஞர்களின் வழமை  எப்போதுமே அவர்கள் நல்லவற்றை எடுத்துக் கொள்வதில்லை இருப்பதில் எது சாதகமானதோ அதையே எடுத்துக் கொள்கின்றனர்.

உதாரணமாக ஒரு திரைப்படத்தில் நடிகர் கூறுவார் "தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு" அந்த திரைப்படத்திலேயே நடிகர் ஜெய்ப்பதற்கு எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து வெற்றியின் போது கூறும் வாசகத்தை நமது இளைஞர்கள் முட்டாள்தனமான முறையில் எந்த விதமான முயற்சிகளும் இன்றி WhatsApp, முகப்புத்தக ஸ்டேடஸ்களாக போட்டுக் கொண்டு தங்கள் தலைமீது மண்ணை வாரிப்போட்டுக் கொள்வதை ஏதோ மார்தட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கின்றனர்.

பெரியவர்களை அவமானப்படுத்துதல், பெற்றோர்களை மதிக்காமல் நடந்து கொள்ளல், ஆசிரியர்களை ஏளனம் செய்தல், பெண்களை கேலி செய்தல் இவ்வாறு தங்களுக்கு பிடித்த நடிகர்கள் படங்களில் செய்யும் சேட்டைகளை இவர்கள் நிஜ வாழ்க்கையில் செய்கின்றனர்.

நடிகர்களின் நிஜ வாழ்க்கையில் எத்தனையோ நடிகர்கள் புகைப்பது கூட இல்லை ஆனால் படங்களை பார்க்கும் முட்டாள்கள் தன் தலைவன் போன்று புகைக்கிறார்களாம்.

இளைஞர்களே யுவதிகளே சமூக வலைத்தளங்களோ சினிமாவோ ஒருநாளும் நம்மை நல்வழிப்படுத்த போதுமானதல்ல. நிஜ வாழ்க்கை என்பது நாம் பார்க்கும் சினிமாக்களில், நாம் பகிர்ந்து கொள்ளும் சிறு சிறு கானொளிகளில் இருந்து முற்றாக வேறுபட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிந்தித்து செயற்பட முயற்சி செய்யுங்கள்.

By : Sameen Mohamed Saheeth
Nintavur.
இன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும். இன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும். Reviewed by Madawala News on July 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.