2018ஆம் ஆண்டுக்கான தேசிய மஸ்ஜித் விருதுகளில் வில்பொல அல்மனார் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு நான்கு தேசிய விருதுகள் .


 (ஆதில் அலி சப்ரி)
2018ஆம் ஆண்டுக்கான தேசிய மஸ்ஜித் விருதுகளில் வில்பொல அல்மனார் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு
நான்கு தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கல்வித் துறை, சகவாழ்வு, ஆகியவற்றில் இரண்டாமிடமும் சமூக சேவை மற்றும் 170 பள்ளிவாசல்களில் அனைத்து மட்ட மதிப்பீடுகளிலும் எட்டாம் இடமும் கிடைக்கப்பெற்றுள்ளன.


2018ஆம் ஆண்டுக்கான தேசிய மஸ்ஜித் விருது வழங்கும் நிகழ்வு சனியன்று (14) அலரி மாளிகையில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் துறைசார் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பங்கேற்புடன் நடைபெற்றது.


தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் ஆலோசனைக்கும் நல்லிணக்கத்துக்குமான பேரவை இணைந்து நடத்திய இவ்விருதுகளுக்கு நாட்டின் 170க்கு மேற்பட்ட மஸ்ஜித்கள் விண்ணப்பித்திருந்தன.


அமைதிக்கும் முன்னேற்றத்துக்குமான நிறுவனங்களாக பள்ளிவாசல்கள் என்ற தொனிப்பொருளில் பிரதேசத்தின் கல்வி முன்னேற்றம், நல்லிணக்கம், சமூக சேவை போன்ற துறைகளில் பள்ளிவாசல்களை மதிப்பீடு செய்தே இவ்விருதுகள் வழங்கப்பட்டன.



அரனாயக்க, வில்பொல அல்மனார் ஜூம்ஆ மஸ்ஜித் கல்வி, சகவாழ்வு, சமூக சேவைகள் ஆகியவற்றில் பிரதேசத்தில் மேற்கொண்ட பணிகளுக்காகவே தேசிய மஸ்ஜித் விருதுகளில் மூன்று விருதுகளும் 170 பள்ளிவாசல்களில் எட்டாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது.


பள்ளிவாசலின் தலைவர் எம்.யு.பர்ஹான் முஹம்மத் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் விருதைப் பெற்றுக்கொண்டனர்.
வில்பொல அல்மனார் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு ரூபா 200,000 பெருமதியான இரண்டு காசோலைகளும் (400,000) வழங்கப்பட்டதோடு இரண்டு நினைவுக் கிண்ணங்களும் வழங்கப்பட்டுள்ளன.


அரனாயக்க, வில்பொல அல்மனார் ஜூம்ஆ மஸ்ஜித் அரனாயக்க சாமரசர கந்த மண்சரிவின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொண்ட மனிதாபிமான பணிகள், தொடராக பாடசாலை மாணவர்களுக்கு நடத்தி வரும் மேலதிக வகுப்புகள் ஆகியனவற்றுக்கும் கௌரவிக்கப்பட்டுள்ளது.

Aadhil Ali Sabry
JOURNALIST
2018ஆம் ஆண்டுக்கான தேசிய மஸ்ஜித் விருதுகளில் வில்பொல அல்மனார் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு நான்கு தேசிய விருதுகள் . 2018ஆம் ஆண்டுக்கான தேசிய மஸ்ஜித் விருதுகளில் வில்பொல அல்மனார் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு நான்கு தேசிய விருதுகள் . Reviewed by Madawala News on July 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.