நீண்டகமாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் - மனைவி .. இறுதியில் சிக்கினர்.


கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய
இலங்கைத் தம்பதியினரை இந்திய பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர்.

இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருவரம்பூர் - துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் வசிக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வரும் இலங்கை அகதியான தேவகுமாரியிடம், 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றுள்ளனர்.

இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின் இவர்களின் நண்பனான நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்த ராஜா என்கிற “கெட்டியான் பாண்டி” அவனது மனைவியுடன் தலைமறைவாகி உள்ளார்.

இவர்கள் தலைமறைவாகி உள்ள விடயம் பொலிஸாருக்கு தெரியவந்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கடந்த 2 மாதங்களாக பூட்டிய வீடுகளில் நகைகளை திருடுவது அதிகரித்து வந்துள்ளது. இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடங்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது தெரியவந்தது.

அப்படி வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் தங்கள் கைவரிசைகளை காட்டியிருக்கிறார் என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டனர்.



இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில், இவர்கள் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை பொலிஸாரால் என்.ஐ.டி அருகே பிடிப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை அகதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான விடயங்கள் வெளிவந்துள்ளன.

“2004 முதல் சைக்கிள் மற்றும் பைக் திருட்டுவது பழக்கம். என்மீது நாமக்கல் பொலிஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்தனர். இதன் பிறகு 3 வருடம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனியாக இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தேன். இதன் பிறகு தான் திருச்சியை சேர்ந்த விக்னேஷ், சிவகுரு ஆகியோருடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடித்தேன்.

குறிப்பாக இதுவரைக்கும் 100 பவுனுக்கும் மேல் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் நாமக்கலில் உள்ள அடகு நகைகடைகளில் வைத்து பணம் பெற்று ஜாலியாக இருந்தோம். தற்போது இலங்கை செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்.

100 பவுன் நகைகளை நாமக்கல் நகை அடகுகடைகளில் அன்றைய நகை விலைக்கே பணம் கொடுப்பதால் அங்கே விற்றேன்” என்று குறித்த இலங்கை அகதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் கூறிய திருவரம்பூர் தனிப்படை பொலிஸார் திருட்டு நகைகளை வாங்கிய நாமக்கல் நகை அடகு கடைக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கைதான இலங்கை அகதி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகமாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் - மனைவி .. இறுதியில் சிக்கினர். நீண்டகமாக  பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் - மனைவி .. இறுதியில் சிக்கினர். Reviewed by Madawala News on July 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.