இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மரணதண்டனையா? ஜம்இய்யத்துல் உலமா இதுவரை தீர்மானத்துக்கு வரவில்லை.

-ஏ.ஆர்.ஏ.பரீல்-
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை
அமுல்ப டுத்தப்படவேண்டும் என்ற தீர்மானத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 
இதுவரை வரவில்லை , 

இஸ்லாத்தில் குற்றவியல் என்பது விசாலமான பகுதி. இது விரிவாக கலந்துரையாடப் படவேண்டிய ஒரு தலைப்பு. 

இலங்கையில் ஓர் இஸ்லாமிய நாடல்ல. எனவே சிரேஷ்ட உலமாக்கள், பத்வாக் குழு என்பனவற்றுடன் நீண்ட கலந் துரையாடலின் பின்பே உலமா சபையின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.


போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடு பவர்களுக்கு ஜனாதிபதி மரண தண்டனையை அமுல்படுத்த தீர்மானித்திருக்கின்ற நிலையில், இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

 “சில இஸ்லாமிய நாடுகளில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. இஸ்லாத்தில் குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை வழங்கப்ப டலாம் என்று கூறப்பட்டுள்ளது.


இதேவேளை நாட்டின் சட்டங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மதிப்பளிக்கிறது.  நாட்டிலிருந்து போதைப் பொருளை வேரோடு அழிக்க வேண்டும் என்ற கருத்தில் உலமா சபைக்கு மாற்றுக் கருத்து இல்லை . 

இதற்காகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உலமாக்களையும், பெண் களையும் தேர்ந்தெடுத்து உலமா சபையின் இளைஞர் விவகாரப் பிரிவு போதைப்பொருள் ஒழிப்புப் பயிற்சிகளை வழங்கி
யுள்ளது. 

பெண்களிடையே போதைப் பொருள் பாவனையை கட்டுப்ப டுத்துவதற்கு 5 பெண்கள் பயிற்று விக்கப்பட்டிருக்கிறார்கள். 

உலமா சபை போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்துடன் தொடர் புபட்டவர்களுக்கு மரணதண் டனை வழங்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பிலான நிலைப் பாட்டினை நீண்ட கலந்துரையா டலுக்குப் பின்பு வெளியிடும்.


அகில இலங்கை ஜம்இய் யத்துல் உலமா சபை சமூகத் தைப்போதைப் பொருளிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட் டங்களை முன்னெடுத்து வருகி றது. போதைப்பொருள் ஒழிப்புப் பிரசாரப் பணிகளில் உலமாக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற் கென தேசிய அபாயகர ஒளட தங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவியும் பெற்றுக் கொள்ளப்ப டுகிறது.


இவ்வருடம் 24 மாவட்டங் களில், 9 மாவட்டங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு ஒவ்வோர் மாவட்டங்களிலிருந்தும் 10) உலமாக்கள் வீதம் 90 உலமாக்க ளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரப் பிரிவினால் பயிற்சிகள் வழங்கப் பட்டன. அவர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட் டுள்ளவர்களை இனம்கண்டு அவர்களுக்கு உளவியல் ரீதியான அறிவுரைகளை வழங்கி வழிந டத்துகிறார்கள். பயிற்சிபெற்ற உலமாக்கள் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப் புகளை குத்பா பிரசங்கங்கள் மூலம் மக்கள் முன் வைக்கி றார்கள், மாவட்ட ரீதியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் உலமாக்களால் வழிநடத்தப்
படுவதுடன்,


 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயத்துக்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் போதைப் பொருளிலிருந்து மீள்வதற்கு வழிகாட்டல் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவ்வருடம் இவ்வாறு அழைத்து வரப்பட் டவர்களில் 7 இளைஞர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங் களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்கள். இவ்வாறான ஏற்பாடுகளுக்கு தேசிய அபாயகர் ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உதவிகளை வழங்குகிறது.


இலங்கையில் போதைப்பொ ருளை ஒழிப்பதற்கு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை திட்டங்களை வகுத்துள்ளது. அடுத்த வருடம் 2019 ஆம் ஆண்டு நாடெங்குமுள்ள உலமா சபையின் 150 கிளை களிலிருந்தும் இப்பணிக்காக உலமாக்களும் பொதுமக்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 150 கிளைக ளிலிருந்தும் ஒரு ஆலிமும் ஒரு பொது மகனும் என்ற ரீதியில் இருவர் இந்தப் பணிக்கென தெரிவு செய்யப்படவுள்ளனர். 150 கிளைகளிலிருந்தும் 300 பேர் தெரிவு செய்யப்பட்டு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். 


இவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் பிரசாரங்களிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். போதைப்பொருளற்ற ஒழக்க விழுமியங்கள் நிரம்பிய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதிர்கால இலக்காகும் என்கிறார்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மரணதண்டனையா? ஜம்இய்யத்துல் உலமா இதுவரை தீர்மானத்துக்கு வரவில்லை. இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மரணதண்டனையா?  ஜம்இய்யத்துல் உலமா இதுவரை  தீர்மானத்துக்கு வரவில்லை. Reviewed by Madawala News on July 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.