தவறுதலாகவேனும் வன விலங்குகள் எமது வீடுகளுக்குள் அல்லது ஊருக்குள் நுழைந்தால் அதன் சாவு தான்! என்ற நிலை மாற வேண்டும்.


இறைச்சிக்காக அறுக்கப்படும் மிருகங்களைக் கூட துன்புறுத்துவது ,அருகிவரும் உயிரினங்களை (Endangered species)
உரிய அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் வீடுகளில் வளர்ப்பது அல்லது அவற்றை வேட்டையாடுவது அல்லது அவற்றைக் கொலை செய்வது வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதனை முகப் புத்தகத்தில் 'Hunt of the day' பதிவேற்றம் செய்யும் அம்பிமார்களுக்குத் தெரியாது .

பாம்பு ,உடும்பு ,முதலை ,மான் ,மரை ,மயில், கழுகு ,யானை முதல் சிறுத்தை  வரை 'Hunted' போட்டோ போட்டவர்கள் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட செய்திகள் தேசிய ,சர்வேதேச மீடியாக்களில் அடிபடுவதனை அடிக்கடி கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறோம்!



எமக்கு தீமை விளைவிக்கும் விலங்குகளைக்கூட கொல்லாமால் முடியுமாயின் அவற்றைப் பிடித்து வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதன் மூலம் அவ்வினம் அழியாமல் பாதுகாக்க உதவி சூழலுக்கு பிரதி உபகாரம் செய்யலாம் .


தாவரம் ,விலங்குகள் ,எமது சூழல் பற்றிய அறிவும் அவற்றை பாதுகாப்பது எமது வாழ்க்கையின் ஒரு பகுதி (part of the life ) என்பதனையும் அவற்றை துஷ்பிரயோகம் செய்யும் பட்சத்தில் நாட்டின் சட்டத்துக்கேற்ப தண்டனை கிடைக்கும் என்பதனையும் ஒவ்வொரு பிரஜையும் அறிந்து இருக்க வேண்டியது அவரவர் கடமை என்பன பாடசாலைகளில் ,பள்ளிவாசல்களில் பிரச்சாரம் செய்யப்பட்ட வேண்டும் . இது மார்க்கத்தின் ஒரு பகுதியும் கூட .

-மீயல்லை ஹரீஸ் ஸாலிஹ் 

தவறுதலாகவேனும் வன விலங்குகள் எமது வீடுகளுக்குள் அல்லது ஊருக்குள் நுழைந்தால் அதன் சாவு தான்! என்ற நிலை மாற வேண்டும். தவறுதலாகவேனும் வன விலங்குகள் எமது வீடுகளுக்குள் அல்லது ஊருக்குள் நுழைந்தால் அதன் சாவு தான்! என்ற நிலை மாற வேண்டும். Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.