அம்பாறை மாவட்டத்தில் 20 பயிற்சிநெறிகளுக்கு இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல் .


(ஏ.எல்.நிப்றாஸ்)
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி
நிலையங்களில் 2018இன் இரண்டாம் அரையாண்டில் சுமார் 20 வகையான பயிற்சிநெறிகளை  தொடர்வதற்கான விண்ணப்பங்களை நிந்தவூரில் உள்ள மாவட்ட அலுவலகம் கோரியுள்ளது.


தமிழ் மொழிமூலத்தில் இயங்கும் 9 பயிற்சி நிலையங்களில் தேசிய தொழில் தகைமை (என்.வி.கியு) அடிப்படையில் இக்கற்கைநெறிகள் நடாத்தப்படவுள்ளன. நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று, பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில், சாய்ந்தமருது, காரைதீவு தொழிற்பயிற்சி நிலையங்களில் 06 மாத கற்கைநெறிகள் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.


இதன்படி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், உதவி கணிய அளவையியலாளர், கணணி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர், மோட்டார் சைக்கிள் திருத்துனர், மின்னியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், உருக்கி ஒட்டுனர், மரக் கைவினைஞர், தையல், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், விடுதி அலங்கரிப்பாளர், உணவு பரிமாறுனர், செயலாண்மை பயிற்சி, ஆடைத் தொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அலுமீனியம் பொருத்துனர், பேக்கர், எலக்ரிக் மோட்டர் வைண்டர், நிர்மாணக் கைவினைஞர் போன்ற முழுநேரக் கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன் 3 மாதகால பகுதிநேர ஆங்கிலக் கற்கைநெறிக்கும்  (என்.வி.கியு. மட்டம் 2) உடன் விண்ணப்பிக்க முடியும்.

முழுநேரக் கற்கைகள் முற்றுமுழுதாக இலவசமாகவும் பகுதிநேரக் கற்கையானது குறைந்தளவான கட்டண அடிப்படையிலும் நடாத்தப்;படும். தகுதியுள்ள இளைஞர், யுவதிகள் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ஆம் திகதி பயிற்சிநெறிகள் ஆரம்பமாகும்.


விண்ணப்பங்களை பிரதிப் பணிப்பாளர், மாவட்டக் காரியாலயம், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 20 பயிற்சிநெறிகளுக்கு இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல் . அம்பாறை மாவட்டத்தில் 20 பயிற்சிநெறிகளுக்கு  இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல் . Reviewed by Madawala News on June 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.