காணி துப்புரவு செய்ய சென்ற தந்தை மகனுக்கு குழியில் இருந்து கிடைத்த சீனப்பிரஜை. #இலங்கை


மாத்தறை - ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக வீதி நிர்மாணிப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும்
நிலையில் காணாமல்போன சீன இளைஞர் தன்தெனிய பிரதேசத்தில் உள்ள காட்டிலுள்ள குழியொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக திஹாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டில் உள்ள காணி ஒன்றை துப்பரவு செய்ய தமது தந்தையுடன் சென்றிருந்த இரண்டு பிள்ளைகள், குழியில் விழுந்து கிடந்த சீனப் பிரஜையின் சத்தத்தை கேட்டு விடயம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்பின்னர் சீனப் பிரஜைக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். அத்துடன் சம்பவ இடத்திற்கு சென்ற திஹாகொட பொலிஸார் சீனப் பிரஜையை மீட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது சீனப் பிரஜையின் உடல் நிலை தேறிவருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சீனப் பிரஜை தனது மூன்று நண்பர்களுடன் இலங்கை வந்து வீதி நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பணிக்கு வந்த முதல் நாளிலேயே தந்தெனிய காட்டுப் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளார்.

கடந்த சில தினங்களாக காணாமல் போன சீனப் பிரஜையை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடி வந்த போது, காணாமல் போயிருந்த சீனப் பிரஜையின் கைபேசி மற்றும் காலணிகள் மீட்கப்பட்டிருந்தன.

காணாமல் போன இந்த சீனப் பிரஜையை தேடி தருபவர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படும் என பிரதேசத்தில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக திஹாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணி துப்புரவு செய்ய சென்ற தந்தை மகனுக்கு குழியில் இருந்து கிடைத்த சீனப்பிரஜை. #இலங்கை  காணி துப்புரவு செய்ய சென்ற தந்தை மகனுக்கு குழியில் இருந்து கிடைத்த சீனப்பிரஜை. #இலங்கை Reviewed by Madawala News on May 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.