கண்டி கலவர விசாரணை விவகாரம்.. ரிஷாத், ஹக்கீமின் ஆத­ரவு எனக்­குள்­ளது.


கண்டி கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கமும் பொலி­ஸாரும் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும்
மேற்­கொள்­ள­வில்லை. நானும் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோ­ருமே குறித்த கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னின்று செயற்­பட்டோம் என்று கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­கம தெரி­வித் தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூட்டு எதிர்க்கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்பிரிவு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. கண்டி மாவட்­டத்தில் அண்­மையில் இடம்­பெற்ற கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­னின்று செயற்­பட்­ட­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் வாக்­கு­மூலம் அளிப்­ப­தற்­காக அங்கு செல்­வ­தற்கு முன்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னைத் தொடர்­பு­கொண்டு குறித்த சம்­ப­வத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­னின்று செயற்­பட்ட விடயம் அவ­ருக்குத் தெரியும் என்­பதை எனது வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பி­டு­மாறும் அது குறித்து தேவைப்­ப­டு­மி­டத்து தன்­னிடம் வாக்­கு­மூலம் பெறு­மாறு குறிப்­பி­டு­மாறும் என்­னிடம் கேட்­டுக்­கொண்டார். ஆகவே அவ்­வி­ட­யத்­தையும் எனது வாக்­கு­மூ­லத்தில் நான் குறிப்­பிட்­டுள்ளேன். கண்டி கல­வ­ரத்தை தடுப்­ப­தற்கு நான் முன்­னின்று செயற்­பட்­ட­மைக்­காக அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனும் எனக்கு நன்றி தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கும்­போது கண்டி கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது போன அர­சாங்கம் அதனை எம்­மீது திணிப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றது. பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு எனது தொலை­பே­சி­யையும் பொறுப்­பேற்­றுள்­ ளது.

அந்த தொலை­பே­சியில் எனது தனிப்­பட்ட தக­வல்கள் அனைத்தும் உள்­ளன. எனினும் எனது தொலை­பேசியை ஆய்வு செய்­வதில் எந்தப் பிரச்­சி­னையும் எனக்­கில்லை என்­பதால் அதனை நான் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­விடம் ஒப்­ப­டைத்­துள்ளேன். ஏனெனில் நான் எவ்­வி­த­மான குற்­றச்­செ­ய­லிலும் ஈடு­ப­ட­வில்லை.

கண்டி கல­வ­ரத்தை அர­சாங்­கத்­தாலும் பொலி­ஸா­ராலும் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. அத­னா­லேயே பிரச்­சினை பர­வி­யது. எனவே அர­சாங்கம் சில தரப்­பி­ன­ரையும் கூட்டு எதிர்க்­கட்சி வேறு சில தரப்­பி­ன­ரையும் குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்புபடுத்தி குற்­ற­ச்சாட்டுக்களை முன்­வைத்­துள்­ளன. எனினும் அவ்­வாறு குற்றம் சாட்­டு­வது முறை­யல்ல. மேலும் கண்டி கலவரம் இடம்பெற்றபோது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தில் அங் கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவில்லை.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோருடன் நானும் இணைந்தே கலவரத்தை கட்டுப்படுத்து வதற்கு முன்னின்று செயற்பட்டோம் என்று தெரிவித்தார்.
கண்டி கலவர விசாரணை விவகாரம்.. ரிஷாத், ஹக்கீமின் ஆத­ரவு எனக்­குள்­ளது. கண்டி கலவர விசாரணை  விவகாரம்.. ரிஷாத், ஹக்கீமின் ஆத­ரவு எனக்­குள்­ளது. Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5