"நீங்க பேச்சு மட்டும்தான்.. செயலில் காட்டுங்கள். ஜனா­தி­பதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் தளத்தில் பதிவு.


எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது அமர்வு நேற்று ஆரம்­ப­மா­கி­ய­தை­ய­டுத்து அதில் ஜனா­தி­பதி
கொள்கை விளக்­க­வு­ரையை நிகழ்த்தி முடிந்­ததும் ஜனா­தி­பதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் தளத்தில் இடப்­பட்ட  பதிவு நேற்று சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

ஜனா­தி­பதி நேற்று பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்தின் கொள்கை விளக்­க­வு­ரையை நிகழ்த்தி முடிந்­ததும் ஜனா­தி­ப­தியின் ஊடக பிரிவு இயக்­கு­கின்ற டுவிட்டர் தளம் இட்ட பதிவில் ""நீங்கள் மிகச்­சி­றந்த பேச்­சாளர். ஆனால் அந்த பேச்­சுக்கள் செயல் வடிவம் பெறு­வதை நீங்கள் உறு­தி­ப­டுத்­த­வேண்டும். அதனை செயலில் காட்­டுங்கள்" என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

 அவ்­வாறு ஜனா­தி­ப­தியின் ஊடக பிரிவு இயக்­கு­கின்ற டுவிட்டர் தளம் இட்ட பதிவு சற்று நேரத்தில் அகற்­றப்­பட்­டது. எனினும் அதற்­கி­டையில் சமூக வலை­தள செயற்­பாட்­டா­ளர்கள் அது குறித்து கருத்­துக்­களை பகிர்ந்­தனர்.

தொடர்ந்து டுவிட்டர் பதிவு ஒன்றை செய்த ஜனா­தி­ப­தியின் ஊடக பிரிவு தற்­போது எமது டுவிட்டர் தளம் மீள இயங்க ஆரம்­பித்­து­விட்­டது. இது தொடர்பில் தற்போது ஊடக பிரிவு விசாரணை நடத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"நீங்க பேச்சு மட்டும்தான்.. செயலில் காட்டுங்கள். ஜனா­தி­பதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் தளத்தில் பதிவு. "நீங்க பேச்சு மட்டும்தான்.. செயலில் காட்டுங்கள்.  ஜனா­தி­பதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் தளத்தில் பதிவு. Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5