மறவன்புலவு சச்சிதானந்தனின் மோட்டுத்தனமான மாட்டுக் கருத்துக்கு சுடர் ஒளி ஆசிரியரின் சாட்டையடி!



மறவன்புலவு சச்சிதானந்தனின் மோட்டுத்தனமான மாட்டுக்  கருத்துக்குத் தமிழ்கூறும்
நல்லுலகிலிருந்து இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என அனைத்து மதத்தைச் சார்ந்த புத்திஜீவிகளினாலும் பலத்த எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

அந்த வகையில் இலங்கையின் 'சுடர் ஒளிபத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவராஜா ராமசாமி  தனது முகநூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:

இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என, சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளாராம்.

இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள். எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானதுஎன்றும் அவர் கூறியுள்ளாராம்.

அவரிடம் சில கேள்விகள்;

1. முள்ளிவாய்க்காலில் நடந்தது கொடுமையா இல்லையா? அதை செய்தவர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

2. இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக சொல்ல முடியுமா உங்களால் ?

3. இறந்த புலிகளின் கல்லறைகள்புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டனவேஇந்து, பௌத்த மதங்கள் இதனை அங்கீகரிக்கின்றனவா?

4. இந்து கோயில்கள் அழிக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்? எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மதம் என்பது கண்ணியம்; அது வெறி அல்ல.இன்னொரு இனத்தைமதத்தை நசுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கும்போதே இந்து , பௌத்த மதங்களின் கோட்பாடுகளில் இருந்து விலகிச் செல்கிறீர்கள்.
பதிலுக்கு காத்திருக்கிறேன்

அவரது  இன்றைய  மற்றுமொரு  பதிவில் இவ்வாறு சொல்கிறார்:

இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்திருப்பது குறித்து சிங்கள நண்பர் ஒருவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்படியானால் வடக்கில் விகாரைகள் அமைவதை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்? ”
என்று திடீரென ஒரு கேள்வியையும் எழுப்பினார் அவர் ....

சொல்வதற்கு பதில் என்னிடம் இல்லை.... நீங்கள் முடிந்தால் சொல்லுங்கள்...
மறவன்புலவு சச்சிதானந்தனின் மோட்டுத்தனமான மாட்டுக் கருத்துக்கு சுடர் ஒளி ஆசிரியரின் சாட்டையடி!  மறவன்புலவு சச்சிதானந்தனின் மோட்டுத்தனமான மாட்டுக்  கருத்துக்கு  சுடர் ஒளி ஆசிரியரின் சாட்டையடி! Reviewed by Madawala News on May 27, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.