பாராளுமன்றத்துக்குள் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது..பாராளுமன்ற கட்டடடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் ஏற்பட்ட தீ பரவலானது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமவின் உத்தியோக பூர்வ அறையிலுள்ள, குளிரூட்டியில் (A/C) தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்துக்குள் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.. பாராளுமன்றத்துக்குள் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.. Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5