சவுதி அரசினால் வழமையாக இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரித்தம் பழம் நிறுத்தப்பட்டது ?



சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வழமையாக இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படும்
பேரீத்தம் பழம் இதுவரை  இலங்கைக்கு வந்தடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது விடயமாக முஸ்லிம் கலாசார அமைச்சு ஏற்கனவே சவுதி அரசுக்கு அறிவித்துள்ள நிலையில் அங்கிருந்து எதுவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என முஸ்லிம் கலாசார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கடந்த 2015  ஆம் ஆண்டு சவுதி அரசு 2500 மெட்ரிக் டொன் பேரீத்தம் பழம் இலங்கை அன்பளிப்பு செய்துள்ளதாக கூறிய அவர் கடந்த 2016, 2017 என அடுத்த வருடங்களில் அது 2000 , 1500 மெட்ரிக் டொன் என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை இவ்வருடம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் முஸ்லிம் கலாசார அமைச்சின் அசமந்த போக்கே இதற்கு காரணம் என முன்வைக்கப்படும் விமர்சனத்தை முற்றாக மறுத்த அவர் ,

முஸ்லிம் கலாசார அமைச்சு ஒவ்வொரு வருடமும் பேரீத்தம் பழம் நன்கொடை தொடர்பில் சவுதி அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவதாகவும் ஒவ்வொரு வருடமும் பேரீத்தம் பழம் நன்கொடை தொடர்பில்  நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஏற்பட்ட இருந்த உறவில் நீண்டகாலமாக ஏற்பட்டுவரும் விரிசலே  இதற்கு காரணம்  தெரிவிக்கப்படும் அதேவேளை சவுதி அரேபிய நாட்டு பொருளாதார கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரசினால் வழமையாக இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரித்தம் பழம் நிறுத்தப்பட்டது ? சவுதி அரசினால் வழமையாக இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரித்தம் பழம் நிறுத்தப்பட்டது ?  Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.