வடிசாராய ரெய்டில் சிக்கியவை. #குச்சவெளி பொலிஸ் பிரிவு


-ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுவா பகுதியில் வைத்து வெவ்வேறு சுற்றிவலைப்பின்
போது வடிசாராயம்,மற்றும் வடிசாராயம் காய்ப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருளான கசாலத்துடன் இருவர் நேற்றிரவு(12)கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம் பகுதியை சேர்ந்த வர்ண குலசூரிய சரோஜா தேவிலா வயது(35)எனும் பெண் மணி எனவும் இவரிடமிருந்து வடிசாராயம் காய்ப்பதற்கான மூலப் பொருள்களான கசாலத்தை கலக்கிக் கொண்டிருக்கும் போது 20லீற்றர் கசாலங்களுடன் கைப்பற்றப்பட்டு கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

மற்றொரு நபரான அதே பகுதியை சேர்ந்தவரான அண்டன் நெட்போலி வயது(43) என்பவரிடமிருந்து தப்பியோடிய போது திடீர் சுற்றிவலைப்பில் 6500 லீற்றர் வடிசாராயத்துடன் மடக்கிப் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் தங்களது குடும்பம் சகிதம் மீனவ தொழிலுக்காக குச்சவெளி பகுதியில் சிலாபத்தில் இருந்து இடப் பெயர்வினை மேற்கொண்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்பிப் பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட வடிசாராயங்கள்,கசாலாக்களையும் குச்சவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வடிசாராய ரெய்டில் சிக்கியவை. #குச்சவெளி பொலிஸ் பிரிவு வடிசாராய ரெய்டில் சிக்கியவை. #குச்சவெளி பொலிஸ் பிரிவு Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5