ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சந்திப்பு. வடகொரிய - தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு. wn


 1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதித்துள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்.

எல்லையைக் கடந்து தென் கொரியா சென்றார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், கிம்மை இருநாட்டு எல்லையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்தார்.

ராணுவமற்ற பகுதியில் உள்ள பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு இருவரும் செல்லவுள்ளனர்.

அணு ஆயுதங்கள் பயன்பாடை வட கொரியா நிறுத்துவதற்கு தயாராக இருப்பது, இந்த வரலாற்று முக்கியத்துவமான சந்திப்பில் முக்கிய கவனம் பெறும்.

எல்லையில் இருபுறத்திலிருந்தும் கிம் மற்றும் மூம் கைகளை குலுக்கினர்.

எதிர்பார்க்கதாக தருணமாக தென் கொரிய அதிபர் வட கொரிய எல்லைக்குள்ளும் சென்றார்.

நெடுங்காலம் கீரியும் பாம்புமாக போர்தொடுத்து வந்து இரு நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் சந்திப்பது உலக வல்லரசாக மார்தட்டும் நாடுகளுக்கு வயிற்றில் புளியை கரைத்த சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சந்திப்பு. வடகொரிய - தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு. wn ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சந்திப்பு. வடகொரிய - தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு. wn Reviewed by Euro Fashions on April 27, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.