இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் மேதினக் கூட்டம் ஏறாவூர்ப்பற்றில்


-அப்துல் கையூம்
இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர்
பிரிவிலுள்ள மாவடிவெம்புக் கிராமத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


எதிர்வரும் 7ஆம் திகதி சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன்  இடம் பெறும் இக்கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளுக்கும் பொறுப்பான ஏற்பாட்டுக்குழுவின் தலைவராக தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.


இது விடயமாக இன்று (25) புதன்கிழமை இந்த விவரங்களைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஏற்ற மேதினக் கூட்டத்திற்கான ஏற்ற ஒழுங்குகளைச் செய்வதற்காக ஜனாதிபதியால் எனது தலைமையில் நியமிக்கப்பட்ட குழு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்தது.


கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் கூட்டத்தில் பங்குபற்ற வரும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்களை அழைத்து வருவதற்காக சுமார் 1500 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


வெளியூர்களிலிருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதோடு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.


தமிழ் பேசும் சமூகத்திற்கு ஸ்ரீலஙடகா சுதந்திரக் கட்சி மதிப்பளித்து இந்த தொழிலாளர் தினத்தை தமிழ் பேசும் பிரதேசத்தில் நடாத்துகின்றது.


கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் பெருந்தேசிய பூர்வீகக் கட்சியொன்று அதனது மேதினக் கூட்டத்தை ஜனாதிபதி தலைமையில் நடாத்துவது இதுவே முதற்தடவையாகும்.

-அப்துல் கையூம்
இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் மேதினக் கூட்டம் ஏறாவூர்ப்பற்றில் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் மேதினக் கூட்டம் ஏறாவூர்ப்பற்றில் Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.