கரும்பலகையில் மைக்ரோசாப்ட் வேர்ட் வரைந்து கற்பித்த ஆசிரியரின் படம் வைரலானதை அடுத்து புதிய கணினி வழங்க மைக்ரோசொவ்ட் நிறுவனம் முன்வந்தது.


கானா நாட்டைச் சேர்ந்த ஆசி­ரியர் ஒருவர், கணினி இல்­லாத நிலையில் கரும்­ப­ல­கையில் கணி­னித்­தி­ரையில்
தெரி­யக்­கூ­டிய காட்­சியை ஓவி­ய­மாக வரைந்து மாண­வர்­க­ளுக்குப் பாடம் கற்­பிக்­கிறார்.

33 வய­தான ரிச்சர்ட் அகோட்டோ எனும் ஆசி­ரியர் ஆபி­ரிக்க நாடான கானா­வி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­று­கிறார்.அவ­ரிடம் கணினி வசதி இல்­லாத நிலையில், கணினி மென்­பொ­ருட்கள் குறித்து அம்­மென்­பொ­ருட்கள் கணி­னியில் செயற்­ப­டும்­போது கணினித் திரையில் தோன்­றக்­கூ­டிய காட்­சியை கரும்­ப­ல­கையில் ஓவி­ய­மாக வரைந்து கற்­பிக்­கிறார் ரிச்சர்ட் அகோட்டோ.அண்­மையில் மைக்­ரோசொவ்ட் வேர்ட் பாடத்தை தெளி­வான ஓவி­ய­மாக வரைந்து தான் கற்­பித்த போது பிடிக்­கப்­பட்ட படங்­களை பேஸ்­புக்கில் அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

பேஸ்­புக்கில் ஒவ்­ருவா க்வாட்வோ எனும் பெயரில் செயற்­படும் ரிச்சர்ட் அகோட்டோ ‘எந்த நேரத்­திலும் வகுப்­ப­றையில் நான் இதைச் செய்­கிறேன். எனது மாண­வர்­களை நான் நேசிக்­கிறேன். எனவே அவர்­க­ளுக்கு விளங்கும் வகையில் நான் கற்­பிக்க வேண்டும். கானாவில் தகவல் தொழில்­நுட்பம் கற்­பிப்­பது சற்று வேடிக்­கை­யா­னது’ எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

மேற்­படி புகைப்­ப­டங்கள் இணை­யத்தில் வேக­மாக பர­வின. இறு­தியில், மைக்­ரோசொவ்ட் நிறு­வ­னத்தின் ஆபி­ரிக்கப் பிரி­வுக்கும் இவ்­வி­டயம் தெரி­ய­வந்­தது. ரிச்­சர்ட்டின் பாட­சா­லைக்கு 2011 ஆம் ஆண்டின் பின்னர் புதிய கணினி எதுவும் கிடைக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில். ரிச்சர்ட் அகோட்­டோவின் வகுப்­ப­றைக்குப் புதிய கணி­னி­யொன்றை வழங்க மைக்­ரோசொவ்ட் நிறு­வனம் முன்­வந்­துள்­ள­துடன் கல்வி உப­க­ர­ணங்­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் உறு­தி­ய­ளித்­துள்­ளது.
கரும்பலகையில் மைக்ரோசாப்ட் வேர்ட் வரைந்து கற்பித்த ஆசிரியரின் படம் வைரலானதை அடுத்து புதிய கணினி வழங்க மைக்ரோசொவ்ட் நிறுவனம் முன்வந்தது. கரும்பலகையில் மைக்ரோசாப்ட் வேர்ட் வரைந்து கற்பித்த ஆசிரியரின் படம் வைரலானதை அடுத்து  புதிய கணினி வழங்க மைக்ரோசொவ்ட் நிறுவனம் முன்வந்தது. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5