(படங்கள்) கண்டி வன்முறைகளை கண்டித்து காத்தான்குடி முழுதும் ஹர்த்தால், கடையடைப்பு அமுல்.-அப்துல் கையூம் -
முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கண்டிக்கும் முகமாக காத்தான்குடி முழுதும் ஹர்த்தால், கடையடைப்பு அமுல் படுத்தப்பட்டு வருகிறது.

வங்கிகள் உட்பட மூடப்பட்டு காத்தான்குடி முழுதும் பூரண  ஹர்த்தால்  அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பாடசாலை  இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை, பிரதான  வீதியில் டயரைப் போட்டு எரித்த நபரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறையைத் தூண்ட முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(படங்கள்) கண்டி வன்முறைகளை கண்டித்து காத்தான்குடி முழுதும் ஹர்த்தால், கடையடைப்பு அமுல். (படங்கள்) கண்டி வன்முறைகளை கண்டித்து காத்தான்குடி முழுதும் ஹர்த்தால், கடையடைப்பு அமுல். Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5