அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் .


நாட்டில் தற்போது இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய
கடமையை தான், நான் செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இன்று (09) காலை கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


முஸ்லிம் மக்கள் தன்னிடம் வேண்டிக்கொண்டதால் தான் இந்த கலந்துரையாடலுக்கு வந்ததாகவும் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு செயல்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைதியுடனும், பொறுமையுடனும் அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் . அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் . Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5

5 comments:

 1. இது அத்தனைக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டது நீங்கதானே அய்யா !போதும் அய்யா உங்கள் நடிப்பு.

  ReplyDelete
 2. அது என்னது சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதைப்போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் பொறுமையாக இருக்கவில்லையா?

  ReplyDelete
 3. சிங்கள மக்களின் பொறுமையின் வெளிப்பாடா அப்துல் பாசித்தின் மரணம்?

  ReplyDelete
 4. இதுதான் சிங்கள மக்களின் பொருமையா? பெற்றோல் பாம் அடிப்பதும்,மனித உயிரை குடிப்பதும்
  உடமைகளை சூரையாடுவதும், இப்படியான பொருமைசாளிகலை வளி நடத்துவதும் இந்த ஐயாவா?
  ஐயாவின் குடும்பத்தாரா? இவன் தனக்கு ஆபத்து வரப்போகுது என்று தெறிந்துவிட்டது.
  காரணம் சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத்பொன்சேகாவுக்கு குடுக்கப்போறங்கள் என்றவுடன்
  அடிவயிற்றில் புளியை காச்சியதுபோல் இருந்தது பிரகு அந்த பதவியை ரனில் விக்றமசிங்காவுக்கு
  கொடுத்ததுடன் இவரும் ஆபத்தானவர் என்று தெறிந்து தன்னுடைய களியாட்டத்தை அம்பாறையில்
  ஆரம்பித்தார் அது கை கொடுக்கவில்லையே என்று கண்டி, திகன என்று ஆரம்பித்து மனித உயிரையும் பறித்து தன்னுடைய கைவரிசையை காட்டியுள்ளார்.

  ReplyDelete
 5. ஒன்னுமே புரியலையே... அது என்ன சிங்கள மக்கள் பொறுமையுடன் இருந்த மாதிரி ...???? முஸ்லிம் மக்களும் பொறுமையுடன் இருக்க வேண்டும்....??? இவனுக்கு கண் குருடா...??? இல்ல காது செவிடா...??? அதுவும் இல்லைன்னா மறை கழண்டு போச்சா...???

  சிங்கள மக்களின் பொறுமையின் சாட்சியா அப்துல் பாஸீதின் மரணம்...???

  ReplyDelete

adsns