முஸ்லிம்கள் ஜும்மா தொழும்வரை வெளியில் காவல் இருந்த பெளத்த தேரர்.நாட்டின் சிறுபான்மையினர் மீது காடையர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில்
இன்று முஸ்லிம்கள் ஜும்மா சென்ற பின்னர் தாக்குதல்கள் இடம்பெறும் என்ற தகவல் நாடு முழுதும் பரவி இருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் பெளத்த தேரர் ஒருவர் இன்று ஜும்மா நேரத்தில் பள்ளி வாயலுக்கு அருகில் காவல் இருந்த தகவல் நெகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

அதேவேளை, ரத்மலாத பகுதியில் ஜும்மா தொழுகையை அடுத்து பிரதேச தேரர்கள் பள்ளிவாயலில் பொதுமக்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம்கள் ஜும்மா தொழும்வரை வெளியில் காவல் இருந்த பெளத்த தேரர். முஸ்லிம்கள் ஜும்மா தொழும்வரை வெளியில் காவல் இருந்த பெளத்த தேரர். Reviewed by Euro Fashions on March 09, 2018 Rating: 5