இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பினி தாய் சப்ரீன் அல்-சகானிக்கு உயிருடன் குழந்தை பிறந்த சம்பவம் பதிவு.பலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், காஸாவின் ரபா நகரில் நேற்று(21) இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 22 பேர் உயிரிழந்தனர்.குறித்த தாக்குதலில் உயிரிழந்த 30 வார கால கர்ப்பமாக இருந்த சப்ரீன் அல்-சகானியின் வயிற்றிலிருந்த குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த வைத்தியர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ததனர்.

தற்போது பிறந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறனர். 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் வைத்தியசாலையில் இருக்கும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பியுள்ளதாக அவரது உறவினர் ரமி அல்-ஷேக் தெரிவித்தார்.
இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பினி தாய் சப்ரீன் அல்-சகானிக்கு உயிருடன் குழந்தை பிறந்த சம்பவம் பதிவு. இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பினி தாய் சப்ரீன் அல்-சகானிக்கு உயிருடன் குழந்தை பிறந்த சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on April 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.