பூக்களுக்கு அடியில் ஒளித்து வைத்து ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் 'மல் கமலா' கைதுஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவர், கெட்டம்பே, ராஜோபா வானராம விகாரைக்கு முன்பாக பூக்கடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது இரண்டு கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மல் கமலா என்ற பெண், பூக்களுக்கு அடியில் வைத்து தனக்குத் தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு ஹெராய்ன் போதைப்பொருள் விற்பனை செய்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்ட பெண்ணின் இரண்டு மகன்களும் ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய விசேட பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
பூக்களுக்கு அடியில் ஒளித்து வைத்து ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் 'மல் கமலா' கைது பூக்களுக்கு அடியில் ஒளித்து வைத்து ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் 'மல் கமலா' கைது Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.