பொருளாதார நெருக்கடி நிலையால் கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் அவல நிலை

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

கொழும்பில் மிகவும் வண்ணமயமான துடிப்பான காட்சிகளில் ஒன்று பெட்டா சந்தைப் பகுதியின் நிரம்பிய தெருக்கள்

ஆகும், அங்குள்ள வீதியோரங்களில் பழங்கள், பொம்மைகள், ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்கும் கடைகளா  நிரம்பியுள்ளன. இரவும் பகலும், அங்கும் இங்கும் கொண்டு செல்கிறார்கள். வாடிக்கையாளர்களால் நிரம்பியிருக்கும் இந்த நெரிசலான தெருக்கள், பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பான வர்த்தகத்தின்  தோற்றத்தை அளிக்கிறது. உண்மையில், நிலவும் பொருளாதார நெருக்கடியாலும், அதிகாரிகளிடமிருந்து வரும் துன்புறுத்தல்கள் குறித்தும் தொடர்ந்து கவலையுடன் தாங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெருவோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.உண்மை நிலையை அறிய கொழும்பின் வீதியோர வியாபாரிகளுடன் ஒரு நாள் செலவிட்டோம்.

'கடந்த காலங்களை போல் அல்லாது வியாபாரம் இப்போதைக்கு ரொம்ப கஷ்டம் இந்த சிறிய பூக்கடையை வைத்தே காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது இப்போதைய உழைப்பு போதாது கூலி வீட்டில் மூன்று பாடசாலை செல்லும் பிள்ளைகளை வைத்து கணவனை இழந்த நிலையில் வாழ்ந்து வருகிறேன். அத்தியவசிய பொருட்கள் விலை அதிகம்இகடன் சுமைஇநகை வங்கியில் இது இவ்வாறு இருக்க மின்சார இநீர் கட்டணம் அதிகரிப்பு போன்றன எம்மை வாட்டி வதைக்கிறது பூ மாலை ஒன்று 200 ரூபா விற்கிறேன் ஆனால் 150 ரூபா சொன்னாலும் கூட வாங்குவார் இல்லை' என கொழும்பு மத்திய பகுதியின் பூக்கடை வியாபாரத்தில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் பெண்மணியான சர்வேஸ்வரி தெரிவித்தார். 



'இந்த பூ க்கடையில் உள்ள மாலையை பேரந்துதில் ஏறி இறங்கி விற்று அதில் வரும் வருமானத்தை கொண்டே வீட்டில் சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும் ஆனால் தற்காலத்தில் வருமானம் போதாது வியாபாரமும் குறைவு ' என சிறிய பூக்கடை கார வயோதிபர் கிருஷ்னா தெரிவித்தார்.

'கடுமையான வெயிலில் இந்த வியாபாரத்தை செய்து வருகிறேன் இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள் கடன் வாங்கியே இந்த பழக் கடை வியாபாரத்தை செய்து வந்தாலும் சரியான நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் வியாபாரம் குறைவு ரொம்ப கவலையுடன் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகிறேன் எனது மனைவி வீட்டு பணிப்பெண்ணாகவே உள்ளார்' என அப்பில், ஒரேன்ஜ் வீதியோர பழக்கடை வியாபாரியான இதயராஜா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். குறித்த வியாபாரியிடம் இலாப செலவு விபரத்தை அறிய முற்பட்ட போதும் அதனை அவர் மறுத்திருந்தார்.


'சாமான் பொருட்களின் விலை அதிகம் இப்போதைக்கு எனக்கு ஒரு நாளைக்கு 1500 ரூபாவே வருமானம் குடும்பத்தில் மொத்தமாக 05 நபர்கள் உள்ளோம் இது வயிற்றிப் பசிக்கு போதாது விரும்பிய பொருட்களையோ எதுவுமே வாங்க முடியாது. கடும் வெயிலில் வியாபாரத்தை நடாத்திச் செல்கிறோம்' என சிறிய வகை விளையாட்டு பொருட்கள் செய்யும் வியாபாரியான ரகுமாd; தனது வீதியோர வியாபார நிலை பற்றியும் பொருளாதார சுமை தொடர்பிலும் வெளிப்படுத்தினார்

கொழும்பு நகர் வியாபார பகுதியின் நிலமை தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி கோ.அமிர்தலிங்கம் அவர்களிடம் வினவிய போது ' பணவீக்கம் 73% இல் இருந்து 53%  ஆகக் குறைவடைந்துள்ள போதும் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது


தற்போது கொள்வனவு வீழ்ச்சி கண்டுள்ளது எரிபொருள் தட்டுப்பாடு பற்றாக்குறை நீங்கினாலும் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை 2019ல் வறுமை ஏற்பட்ட நிலையில் மக்களுடைய வாழ்வாதாரத்தில் அது திருப்திகரமாக அமையவில்லை தற்போது முறைசார் துறைகளாக அரச தனியார் துறை காணப்பட்டாலும் முறை சாரா துறையாக இருக்கின்ற அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் மக்களுடைய வாழ்க்கையில் விடிவு கிட்டவில்லை புத்தாண்டில் மக்களுடைய பொருட்கொள்வனவு குறைவாகவே உள்ளது கொழும்பு நகர் பகுதி வர்த்தகத்தோடு தொடர்ந்தும் காணப்படுகிறது இங்கு விவசாயமோ வேறு வகையான நிலமைகளோ இல்லை நிர்மாணத் துறை தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு சில துறைகள் வழமைக்கு பொருளாதார ரீதியில் திரும்பி வருகின்றன. தொழில் வாய்ப்பில் பிரச்சினை உள்ளபடியால் மக்களுடைய வருமானத்தில் மாற்றமில்லை இதனால் வருமானமட்டல்  ரீதியான பிரச்சினை உள்ளது


எப்படித்தான் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற நினைத்தாலும் தொடர்ந்தும் இவ்வாறான வீதியோர வர்த்தக முறை மூலமே இலாபமீட்ட முடியும். இதனை நிரந்தரமான தொழிலாக கருதினாலும் கொழும்பு புறக்கோட்டை பகுதியானது 1ம்இ2ம் குறுக்குத் தெரு மற்றும் அதனை அண்டிய பகுதிகள் வீதியோர வியாபாரமாகவும் நடைபாதை வியாபார நிலையமாகவுமே காட்சியளிக்கிறது இந்த வர்த்தக நிலை மாலை சுமாராக 7 மணிக்குப் பிறகு மூடப்படுவதனை அவதானிக்க முடிகிறது . தமிழ் சிங்கள இநோன்பு பெருநாள் கலை கட்டியபோதும் மக்களிடத்தில் பணமில்லை மக்களிடத்தில் பணம் இருந்தால் தான் விரும்பிய பொருட்களை கொள்வனவு செய்வார்கள் என்பதை நன்கு தெரிந்து கொள்ளக்கூடிய நிலை உள்ளது.


சிறிய ரக அளவிலான பொருள் விற்பனையே இடம் பெற்று வருகின்றன. பழவகை விளையாட்டு பொருட்கள் ஆடை அடிகலன்கள்  உற்பத்தி பொருட்கள் என பல வகையான பொருள் விற்பனை இவ் வீதியோர பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


கொழும்பு மத்திய பகுதியானது வர்த்தக ரீதியான தளத்தை கொண்ட ஒரு பகுதியாக அமையப் பெற்றுள்ளது. 'அச்சாறு வியாபாரம் செய்து வருகிறேன் ஆனாலும் மக்களிடத்தில் காசு இல்லை பொருட்களும் விலை அதிகம் மக்களிடத்தில் காசு இருந்தால் தான் அவர்களும் எங்களிடத்தில் வாங்குவார்கள் இப்போதைக்கு கஷ்டம் வியாபாரம் குறைவு சகல பொருட்களும் செமையான விலை அது மட்டுமன்றி இதனை தொடர்ந்தும் முன்னெடுப்பது என்பது இயலாத நிலையாக உள்ளது அன்றாட வருமான வழி குறைவு இருப்பதை கொண்டு ஓரளவு குடும்ப வாழ்க்கையினை கொண்டு செல்கிறோம் .


வீதியில் வியாபாரம் செய்வதென்பது நிரந்தரமாக செய்ய முடியாது சில வேலை பொலிஸார் தடை விதிக்கின்றனர் இவ்வாறாக வியாபாரத்தை கொண்டு செல்வது பல இன்னல்களை சந்தித்தே ஆக வேண்டும்' என பல வகையான பழவகைகளை கொண்டு அச்சாரு உற்பத்தி வியாபாரியான இம்தியாஸ் தெரிவித்தார்.

 


அதிகமான சனநெரிசல் வியாபார நிலைமையில் பல இடர்பாடுகளை கொண்ட பகுதியாக மத்திய பகுதி காணப்பட்டாலும் இவ்வாறான வீதியோர வியாபாரிகளின் நிலமை கவலைக் கிடமே அதிகமான சத்தம் எழுப்பியும் வியாபாரம் செய்யக்கூடிய இடமாக இந்த இடம் மாறியுள்ளது உள்நாட்டு வெளிநாட்டு உற்பத்தி பொருட்களின் சந்தைப்படுத்தல் அதிகமாக இங்கு காணப்பட்டாலும் அதனை சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிட்டுகின்ற போதும் பொருளாதார பின்னடைவு பணவீக்கம் போன்றன விழிம்பு நிலை  மக்களை அது ஏமாற்றியுள்ளது தினக் கூலியாக ஒரு நாளைக்கு 1500இ2000 வரை உழைத்தாலும் அது குடும்ப ஜீவனாம்சத்துக்கு தற்கால நிலையில் போதாமையாக உள்ளது


இது பற்றி கொழும்பு மத்திய பகுதி வியாபாரிகளின் குடும்ப தலைவிகளை சந்தித்து நிலவரம் தொடர்பில் கேட்டறிந்த போது இவ்வாறு தெரிவிக்கின்றனர்' ஒரு நாளைக்கு 2000 ரூபா உழைத்தால் அது மறு நாளே போதாது மிச்சம் பிடிக்க முடியாது முன்னர் உள்ள காலத்தை விடவும் இப்போதைக்கு வாழ்வது கடினமே பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதென்றால் இப்போதைய விலை கடந்த முறையை விடவும் மூன்மு மடங்காக அதிகரித்துள்ளது கணவன்மார் உழைத்து வருவதை எங்களால் எப்படி மிச்சம் பிடிப்பது எல்லா பொருட்களும் விலை அதிகமே மின்சாரக் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பை காட்டுகிறது'


'வியாபாரம் இப்போது குறைவு போதாது இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம் சில வேலை வீதியோர வியாபாரத்தின் போது பொலிஸார் அகற்றச் சொல்வார்கள் அவர்களது கடமையை அவர் செய்கிறார்கள் என்ன செய்வது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியும் உள்ளது' என வீட்டு உபகரணப் பொருள் வியாபாரியான றம்சீன் தெரிவித்தார்.

 


அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் வாக்குறுதிகளை வழங்கிய போதும் வியாபாரிகள் நடைபாதைகளை வியாபாரத்துக்கு பயன்படுத்துவது தொடர்பில் திட்டவட்டமான சட்டங்கள் எவையும் இல்லை என்பது நடை பாதை வியாபாரிகள் கொண்டுள்ள உண்மையான கரிசனையாகவுள்ளது) 

கொழும்பு நகரில் உள்ள வீதியோர வியாபரிகளுக்கு என்று கொழும்பு மாநகர சபை விதிகள் எதனையும் விதிக்கவில்லை. அவ்வப்போது தமது வசதிகளுக்கு ஏற்ப சில ஒழுங்குமுறைகளை மாத்திரk; செய்கின்றனர். வாடகைப் பணமும் பெறுகின்றனர். ஆனால் இது பற்றி கொழும்பு மாநfர சபை அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமாக அறியமுடியவில்லை. நடைபாதைகளை வியாபாரத்துக்கு பயன்படுத்துவது தொடர்பில் சம காலத்தில் காணப்படும் ஏதாவது ஒழுங்குவிதிகள் தொடர்பான விபரங்களை கொழும்பு மாநகர சபை அதிகாரிகளிடம்  கோரிய போதும், அவ்வாறான தகவல்கள் எவையும்  வழங்கப்படவில்லை).


(மக்கள் பரபரப்பாக இயங்கும் வேளைகளில் வாகனங்களுக்கு அல்லது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதற்கு நடைபாதை வியாபாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை, இதன் காரணமாகவே அவ்வாறான வேளைகளில் நடைபாதை வியாபாரிகள் பொலிசாரினால் அகற்றப்படுகின்றனர். அத்துடன், சில ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் பேரணிகளின் கருப்பொருட்களில் உள்ள விடயங்கள் நடைபாதை வியாபாரிகளையும் பாதிக்கும் விடயங்களாக உள்ள போதும் அவ்வகையான முன்னெடுப்புகள் நடைபாதை வியாபாரிகளுக்கு மேலதிக பிரச்சினைகளையும் கொண்டு வருகின்றன. இவற்றின் போது ஏற்படுத்தப்படும் வீதித் தடைகள் மற்றும் பாதைகள் மூடப்படுதல் என்பன இவ்வியாபாரிகள் தற்போது மேற்கொள்ளும் சிறிய அளவான வியாபாரங்களுக்கும் பாதகமாக மாறுகின்றன).

ஆனால் விதியோர வியாபரரிகள் இது பற்றித் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். தத்தமது அரசியல் நோக்கில் அரசியல்வாதிகள் அவ்வப்போது இது பற்றிப் பேசினாலும் இதுதான் சட்டம் என்ற ஒரு ஒழங்குவிதி இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். ஏனைய வர்த்தகர்களுக்குச் சங்கம் இருப்பது போன்று தமக்குச் சங்கங்கள் இல்லை எனவும் இவர் கவலை வெளியிட்டனர்.


இடங்களுக்கு நில வாடகை அறவிடும் முறைமை வியாபாரிகள் பயமின்றி தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகுக்கும் என்பதால் அவ்வாறான ஒரு முறைமை தமக்கு வசதியானதாக அமையும் என ஒரு வியாபாரி  கூறினார்: “இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் மத்திய கொழும்பு பிரதேசத்தில் வீதியோர வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினுk; அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் அவர்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதில் எந்தவித கவனத்தையும் செலுத்தவில்லை.”) 

இவர்கள் குடும்ப வாழ்க்கையில் நாளாந்தம் தங்களது பாடசாலை செல்லும் பிள்ளைகள் உட்பட பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்கள். கடந்த காலங்களை விடவும் தற்போதுள்ள நிலையில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு இபொருட்கள் தட்டுப்பாடு போன்றன நிலவுகிறது இது இவ்வாறு இருக்க மழை காலங்களில் வீதியோர வியாபார நடவடிக்கைகளை கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்படுவதுடன் நாட்டில் ஏற்பட்ட ஸ்திரத் தன்மை காரணமாக அரசாங்கத்து எதிரான வீதிமறியல் போராட்டங்கள் கொழும்பு நகரில் பல தொழிற் சங்கங்கள்இஅமைப்புக்கள்இ பல்கலைக்கழக மாணவர்கள் என போராட்டங்களை நடாத்துகின்றனர் இதனால் கொழும்பு மத்திய பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் வீதியோர வியாபார பொருட் கொள்வனவு நடவடிக்கைகள் வீதி தடைகள் மூலமாக பாதிக்கப்படுகின்றன.

பொருளாதார பின்னடைவு மூலமாக நாட்டில் இவ்வாறான நிரந்தர இடமின்றி வீதியோர வியாபாரிகள் கடும் மழை வெயில் என பாராது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் தாமும் தங்களது பிள்ளைகளும் வாழ வேண்டும் என்பதற்காக இவ்வாறு தங்களை தாங்களே பொருளாதார சுமையில் மாய்த்துக் கொள்கின்றனர்கள்.

 

இவ்வாறான விடயங்களுக்கு எதிராக அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ள பல தொழிற்சங்கங்கள்இபல்கலைக்கழக மாணவர்கள் விலை குறைப்பு போதாதுஇவரி அறவீடுஇ அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சித்தல் இ பயங்கரவாத தடை சட்டத்துக்கு புதிய எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிரான போராட்டம் கொழும்பு நகர் பகுதிகளில்தான் இடம் பெறுகின்றன.

நடை பாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு தொடர்பில் அண்மையில் (06.04.2023) கொழும்பு துறை வியாபாரச் சங்கம் மற்றும் நடை பாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகSடன் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம் பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதன் போது உறுதியளித்தார்.இதன்போது வியாபாரிகளுக்கான அடையாள அட்டை விநியோகிப்பது பற்றியும் ஆராயப்பட்டது.( இவ்வமைப்பு பெரிய கடைகளை நடத்துவோரை பிரதிநிதித்துவம் செய்கின்றது)


பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது சாதாரண கூலித் தொழிலாளி முதல் நடுத்தர வர்க்க மக்களும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகமான நெருக்கடி உள்ள பகுதியில் வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிப்பதும் ஒரு வாழ்க்கைப் போராட்டமாகவே உள்ளது.


சாதாரண குடிமகன் குடும்ப ரீதியாக உணவு தேவைகளை நிவர்த்தி செய்தல்இ பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் மாதாந்த கட்டணங்களை செலுத்துதல்இ கடன் தவனைகளை செலுத்துதல் ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் இவ் வியாபாரிகள் பல பிரச்சினைகளுக்கு பொருளாதார ரீதியான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


பொருளாதார நெருக்கடியானது மக்களை வறுமை நிலைக்கு தள்ளியுள்ளது இதனால் கையிருப்பில் பணமின்றி கொள்வனவு சக்தி குறைவடைந்த நிலையில் தொழில் இன்றி பல இளைஞர்கள் காணப்படுகிறார்கள்.


ஏனைய வர்த்தகத் துறையுடன் ஒப்பிடும் போது வீதியோர வியாபாரிகளின் நிலை நாளாந்த நடவடிக்கைகளில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது எடுத்துக்காட்டாக கொரோனா நோய் தாக்கம் காரணமாக பல பின்னடைவுகளை சந்தித்த இவர்கள் தற்காலத்தில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


ஏனைய துறைகளைப் போன்று முன்னேறுவது கடினம் .இருந்த போதிலும் இவர்களுடைய நிலையை விரிவுபடுத்தவும் வருமானத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் புதிய திட்டமொன்றை வகுக்க வேண்டும். வீதி யோர தடைகள் சில நேரம் கொழும்பு மத்திய பகுதியில் பொலிஸாரினால் ஏற்படுத்தப்படுவதுண்டு இதனால் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.


போக்குவரத்து பொலிஸார் வீதியோரங்களில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை சில வேலை அப்புறப்படுத்துமாறும் போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி செயற்படுத்துமாறும் கூறுகின்றனர். ஆனாலும் நிரந்தரமான விற்பனை செய்யக் கூடிய இடவசதி போதாமை பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க டொலரில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இதனால் வியாபாரத்தை ஆரம்பிப்பதாயின் மூலதனச் செலவானது கடந்த காலங்களை விடவும் தற்போது பல  மடங்கு வரை அதிகரித்துள்ளது. பல வியாபாரிகள் வங்கிகளில் கடன் பெற்றிருப்பார்கள் இதனை மீளச் செலுத்த முடியாது அதிகரித்த வட்டி வீதம் போன்றன அவர்களை வாட்டி வதைக்கிறது.அதிகமான பொருட்கள் சுமார் 90 வீதமானவை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது இதன் மூலம் வரிச் சுமையும் அதிகரித்துள்ளது இதனால் சாதாரண பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.


கொழும்பு நகர் பகுதியில் அதிகளவான வியாபார நடவடிக்கைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வீதியோரங்களில் விற்பனையில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள் இரவு பகல் பாராது நாட்டாமை ஊழியர்களும் கூட வண்டிகளில் சுமந்து பொருட்களை ஏற்றி இறக்குகின்றனர் இவ்வாறு இருந்த போதிலும் சகல விதமான கூலிகளும் போக இது போன்ற வியாபாரிகளின் இலாபமீட்டல் குறைவாகவே உள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.


அதிகமான சாதாரண மக்கள் சேரிப்புறங்களிலும் அடுக்கு மாடிகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். நாள் கூலி தொழிலாளிகளாகவும் முறைசாரா துறை என்ற நிலையில் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டாலும் சுமார் குடும்ப வாழ்வில் பாடசாலை செல்லும் பிள்ளைகள் உட்பட சுகாதார தேவைகளை பூர்த்தி செய்தல் முதல் பொருளாதார கஷ்டங்களை அனுபவித்தே வருகின்றனர்.


இவ்வாறாக ஒட்டு மொத்தமாக இவர்களின் நிலை அறிந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மாற்று வழி வகைகள் ஊடாக வீதி வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா என அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

(தானும் தனது கணவரும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கொண்டிருந்த கனவுகளை பூக்கடை நடத்தும் சரஸ்வதி என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவரின் கணவர் 20 வருடங்களாக அந்த பூக்கடையை நடத்தி வந்த நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் திடீரென மரணமடைந்து விட்டார், அதன் பின்னர் கடையைக் கையேற்ற சரஸ்வதி அதனை தற்போது நடத்தி வருகின்றார். அவரின் மூன்று பிள்ளைகளும் பாடசாலைக்கு செல்லும் நிலையில், வீட்டு வாடகையாக மாதாந்தம் 20,000 ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. அவரின் நிதியியல் சிரமங்கள் அவரின் முன் மலைபோல் குவிந்துள்ளன. அவரின் திடமான மனவுறுதிக்கு மத்தியிலும், நிம்மதியான வாழ்வை அமைக்க வேண்டும் என இந்த சுயதொழில் செய்யும் பெண் கொண்டுள்ள கனவு நனவாவது எட்டாக்கனியாகவே உள்ளது.)





பொருளாதார நெருக்கடி நிலையால் கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் அவல நிலை பொருளாதார நெருக்கடி நிலையால் கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின்  அவல நிலை Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.