பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை எழுச்சி கண்டு வருகிறது.... எதிர்வரும் டிசம்பரின் பின்னர் நாடு பழைய நிலைக்கு மாறிவிடும்.



(அஷ்ரப் ஏ சமத்)

மலையக மக்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு (சமூக சேவை நலன்) கொடுப்பனவை அரசாங்கம் இல்லாமல் செய்துவிட்டது நிறையப்பேர் பெயர் பட்டியலை நீக்கிவிட்டதாக சிலர் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவ்வாறில்லை.

இந்த நாட்டில் பதினைந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மலையக மக்கள் வாழ்கின்றனர் அதில் ஓர் இலட்சத்து முப்பத்தையாயிரம் பேர் மட்டுமே சமுர்த்தி பெற்றனர். நாம் இன்னும் இன்னும் மலையக சமூகம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக கேவலம் படுத்துகின்றனர்.


மேற்கண்டவாறு நீர் விநியோகம் மற்றும் மலையக உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று 22 அவரது அமைச்சில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராமேஸ்வரன் கலந்து கொண்டார்.


தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் ...

நுவரெலியா மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் மக்கள் உள்ளனர் இதில் 85 ஆயிரம் பேர் சமுர்த்தி பெருகின்றனர்.


இவை 52 வீதமாக உள்ளது.மலையக மக்கள் சமுர்த்தி கொடுப்பனவு நீக்கப்படுவது சம்பந்தமாக இன்று நாங்கள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவர்களை சந்தித்து மலையக மக்கள் பற்றிய சமுர்த்தி கொடுப்பனவுகள் பற்றிய அறிக்கை ஒன்றை கையளித்துள்ளனர். இவ்விடயங்கள் நாங்கள் அடையாளம் கண்டு அதை தீர்த்து வைக்கப்படும்.


இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் தற்போது எழுச்சி கண்டு வருகிறது. இலங்கையில் தற்பொழுது பணவீக்கம் 35 வீதமாகும் எதிர்வரும் டிசம்பர் 10 வீதத்தினை சென்றுவிடும் அதன் பின்னர் நாடு பழைய நிலைக்கு மாறிவிடும். பொருளாதார நெருக்கடி உள்ள காலத்தில் அரசியல்வாதிகள் தங்களது சுய நலன்களுக்காக மக்களை தூண்டி விடுகின்றனர்.


எதிர்வரும் வாரம் நுவரேலியாவில் 12க்கும் மேற்பட்ட குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்ட. அத்துடன் இந்திய அரசு கொடுத்த வீடமைப்புத் திட்டம் 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும் கட்டிடப் பொருட்கள் விலை அதிகரிப்பினால் 25 இலட்சம் ரூபா வீடொன்றை நிர்மாணிக்க நிதி உதவித் திட்டத்தினை அதிகரித்துள்ளது.

அத்துடன் நாளை பாராளுமன்றத்தில் பொதுப்பயன்பாடு தலைவர் ஜானக்க ரத்நாயக்க விடயத்தில் அரசாங்கத்துடன் ஆதரவாகவே எமது நிலைப்பாடாகும். அவர் தன்னிச்சையாக மினசாரத்துறை அமைச்சர் அத்துறையை சீராகக் கொண்டு செல்லும் போது அதற்கு குந்தகமாக செயல்பட்டார். எனவும் ஜீவன் தொண்டமான அங்கு உரையாற்றினார்
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை எழுச்சி கண்டு வருகிறது.... எதிர்வரும் டிசம்பரின் பின்னர் நாடு பழைய நிலைக்கு மாறிவிடும்.  பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை எழுச்சி கண்டு வருகிறது.... எதிர்வரும் டிசம்பரின் பின்னர் நாடு பழைய நிலைக்கு மாறிவிடும். Reviewed by Madawala News on May 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.