சுமார் 1000 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது.



யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 989 கிலோகிராம் (ஈரமான எடை) கொண்ட காய்ந்த மஞ்சளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


கடற்படையினர் நேற்று (19) மேற்கொண்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கடத்தலுடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மண்டைதீவு தீவில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை சோதனை செய்த போது, சுமார் 496 கிலோ 054 கிராம் (ஈரமான எடை) மஞ்சள் (14 சாக்குகளில்) கடத்தி வரப்பட்டதையும், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டனர். மேலும், சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட சுமார் 48 கிலோ 030 கிராம் (ஈரமான எடை) மஞ்சள் (01 சாக்கு) கடற்படையினரால் மீட்கப்பட்டது.


அத்தோடு, குருநகருக்கு அப்பால் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்த போது 445 கிலோ 800 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள, கடத்தப்பட்ட மஞ்சள் நிரப்பப்பட்ட 12 சாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களையும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 33 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் காய்ந்த மஞ்சள் (ஈரமான எடையில் சுமார் 989 கிலோ மற்றும் 884கிராம் எடையுள்ள) மற்றும் 02 டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன
சுமார் 1000 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது. சுமார் 1000 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது. Reviewed by Madawala News on January 20, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.