பொலனறுவையில் எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பதால், மாதாந்தம் 50,000 ஆணுறைகளை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை.



எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதன் காரணமாக, பொலன்னறுவை மாவட்டத்தில் பொது இடங்களில் நிறுவப்படவுள்ள கரும பீடங்கள் மூலம் மாதாந்தம் 50,000 ஆணுறைகளை இலவசமாக வழங்க பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதிநாள் வரை பொலன்னறுவை மாவட்டத்தில் 16 எச்.ஐ.வி நோயாளர்கள் (எயிட்ஸ் நோயாளிகள்) கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஐவர் சிறுவர்கள் எனவும் பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.கே. சரத்சந்திர குமாரவன்ச தெரிவித்தார்.


பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 82 எனவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பாலின உறவு காரணமாகவே இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
பொலனறுவையில் எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பதால், மாதாந்தம் 50,000 ஆணுறைகளை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை. பொலனறுவையில் எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பதால்,  மாதாந்தம் 50,000  ஆணுறைகளை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை. Reviewed by Madawala News on December 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.