தண்ணீர் விலையை விட பால் விலை குறைவு.



ஒரு லீற்றர் தண்ணீர் போத்தலின் விலை 160 ரூபாய் 
என்றும் ஆனால் ஒரு லீற்றர் பாலின் விலை 110 ரூபாய் என்றும் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கணேசபுரத்தில் இயங்குகின்ற பிள்ளையார் பாற் பண்ணையாளர்கள், இச்சூழலில் தம்மால் பாலுற்பத்தியை அதிகரிக்க முடியாமலுள்ளது என்றும் கவலை தெரிவித்தனர்.

அப்பகுதி பாற்பண்ணையாரள்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் மேற்படி பாற்பண்ணையில் இன்று (16) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் 10 தொடக்கம் 20 லீற்றர் பால் கறக்கும் மாடுகளை வளர்த்து வந்த எமது பண்ணையாளர்கள், தற்போது அனைத்து கால்நடை தீவினங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் அதிக விலையேற்றம் காரணமாக மாடுகளை விற்பனை செய்து கொண்டு வருகின்றார்கள்.

இதனால் எமது பகுதியில் பாலுற்பத்தி மிக வேகமாக குறைவடைந்து கொண்டு செல்கின்றது. எமது பண்ணையில் எமது பகுதியிலிருந்து நாளாந்தம், சுமார் 500 லீற்றல் பாலைச் சேகரித்து வந்தோம், தற்போதைய நிலையில் 200 க்கும் குறைவான லீற்றர் பால்தான் ஒரு நாளைக்குச் சேகரிக்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டனர்.

“தற்போது எமது பண்ணையாளர்கள் மாடு வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்வதா கைவிடுவதா என்ற நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மாடுகளுக்குரிய உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் இருக்கவில்லை மாறாக தற்போது ஒரு லோட் வைக்கோல் 15,000 ரூபாய், ஒரு கிலோ தவிடு 120 ரூபாய் மற்றும் மருந்துகளின் விலைகளும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.

ஒரு லீற்றர் தண்ணீர் போத்தலின் விலை 160 ஆனால் ஒரு லீற்றர் பாலின்விலை 110 ரூபாய். இவ்வாறுதான் நிலமை செல்கின்றது. இச்சூழலில் எம்மால் பாலுற்பத்தியை அதிகரிக்க முடியாமலுள்ளது” என்று தெரிவித்தனர்.

“கிராமிய பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், பாலுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் சொல்கின்றது. ஆனால் அதனை செயல் வடிவில் கொண்டு வருகின்றார்களில்லை. எமக்கு அரசாங்கம் உதவ முன்வராவிட்டால் எமது பகுதியில் பாலுற்பத்தி இல்லாமல் போகும் நிலமை ஏற்படும்.

பாலுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்தபோது எமது பண்ணையாளர்கள் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கறவைப் பசுக்களை கொள்வனவு செய்தார்கள். தற்போது பாறுக்கு நியாய விலைய இன்மையால் பெற்ற கடமையும் பண்ணையாளர்கள் மீளச் செலுத்த முடியாத நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதனால் எமது வாழ்வாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதோடு. எமது பின்ளைகளின் கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல விடைங்களில் மாபெரும் கீழ் நிலைக்குத் தள்ளப்படும் நிலமைக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே அரசாங்கம், பால் விலையை குறைந்தது ஒரு லீற்றருக்கு 200 ரூபாய்க்கு மேலாவது அதிகரிக்க வேண்டும், இல்லையேல் நாம் எமது கால்நடைகள் அனைத்தையும் வீதிக்கு இறக்கி மாபெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம்.

எனவே அரசாங்கம் கால்நடைகளின் மருந்துகள், ஏனைய உணவுப்பண்டங்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். அவ்வாறெனில்தான் எமது பகுதியில் பாலுற்பத்தியை அதிகரிக்க முடியுமே தவிர இல்லையேல் நாங்கள் அனைவரும் மாடு வளர்ப்பைக் கைவிட்ட வேண்டிய நிலமை ஏற்படும்.

நாங்கள் எமது வாழ்வாதாரமாகவுள்ள கால்நடை வளர்ப்பைக் கைவிடும் பட்சத்தில், அரசாங்கம் எமக்கு மாற்று வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பின்னிற்கக் கூடாது” எனவும் அப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.



தண்ணீர் விலையை விட பால் விலை குறைவு. தண்ணீர் விலையை விட  பால் விலை குறைவு. Reviewed by Madawala News on October 16, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.