வரி திருத்தம் காரணமாக, சில வைத்தியர்கள் வருடாந்தம் இரண்டு மாத சம்பளத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்படுகிறது... இதனால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர்.


உத்தேச வருமான வரி மற்றும் ஏனைய வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, அவ்வாறு செய்யத் தவறினால் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.


குறித்த வரித் திருத்தங்கள், வைத்திய நிபுணர்களை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டும் என்றும் உத்தேச வரி அதிகரிப்பு காரணமாக விசேட வைத்தியர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கமும் வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனின் பெரும்பாலான வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


வரி திருத்தம் காரணமாக, சில வைத்தியர்கள் வருடாந்தம் இரண்டு மாத சம்பளத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் இது தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பரிசீலித்து நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.


வைத்தியர்கள் மட்டுமின்றி பிற துறைகளைச் சேர்ந்த தொழில்வாண்மையாளர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டை பின்தங்க வைக்கும் என்றார்.

வரி திருத்தம் காரணமாக, சில வைத்தியர்கள் வருடாந்தம் இரண்டு மாத சம்பளத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்படுகிறது... இதனால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர். வரி திருத்தம் காரணமாக, சில வைத்தியர்கள் வருடாந்தம் இரண்டு மாத சம்பளத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்படுகிறது... இதனால்   வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர். Reviewed by Madawala News on October 25, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.