மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..



கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதனை தடுக்குமாறு அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களின் சேவைகளை பெற்றுக்கொண்டு அங்கு சேவைகளை வழங்கச் செல்வது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் உள்ள பணத்தைத் திருடி இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் சிறுவர்கள் பலர் அதற்கு அடிமையாகி வருவதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.


பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அழைத்து வரும் தாய்மார்களும், தந்தைகளும் மசாஜ் நிலையங்களுக்குச் செல்லும் போக்கும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன் காரணமாக குடும்ப உறவுகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டவிரோதமாக மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இந்த வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. Reviewed by Madawala News on October 17, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.