போலியான சமூக வளைத்தள கணக்குகளுக்கு எதிராக அபராதம் விதிக்க தீர்மானம். I



போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் மெட்டா, கூகுள், ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி, போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

போலியான சமூக வளைத்தள கணக்குகளுக்கு எதிராக அபராதம் விதிக்க தீர்மானம். I போலியான சமூக வளைத்தள கணக்குகளுக்கு எதிராக அபராதம் விதிக்க தீர்மானம். I Reviewed by Madawala News on June 17, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.