அன்னப் பறவைகள் நடமாட்டம் அதிகரிப்பு.

- பாறுக் ஷிஹான்-

அம்பாறை மாவட்ட பகுதியில் தற்போது  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்  காரணமாக

அன்னப் பறவை இனங்கள்  சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.


இப்பறவைகள் மருதமுனை, நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு ,கல்முனை,சம்மாந்துறை  ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர்  நிலைகளை நாடி   வருகை தருகின்றன.


 இதனால்  வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த இப் பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் 


இம் மாதக் கடைசியில் இப்பகுதிகளுக்கு  பல நாட்டுப் பறவைகளும்  இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி பெப்ரவரி  மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 3000 மைல்  தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. 


மேலும் இப்பகுதிக்கு  நாரை இனங்கள்     உள்ளிட்ட வலசை  பறவையினங்கள்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னப் பறவைகள் நடமாட்டம் அதிகரிப்பு. அன்னப் பறவைகள் நடமாட்டம் அதிகரிப்பு. Reviewed by Madawala News on January 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.