15 தொடக்கம் 24 வயதுடையவர்களுக்கே H.I.V தொற்று அதிகரித்துள்ளது... இளைஞர்களுக்கு பாலியல் கல்வியை கொடுக்க வேண்டியது அவசியம்.



இளைஞர்கள் மத்தியில் பாலியல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டியது அவசியமென எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியர் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இளைஞர்கள் மத்தியில் பாலியல் கல்வி தொடர்பிலான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியது அவசியமென அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரசாங்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளாா்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டில் இதுவரையில் 3,700 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களில் 60 சதவீதமானவர்களே தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அவ்வாறானால் 40 வீதமான நோயாளர்கள் சிகிச்சை பெறாமல் இருக்கிறாா்கள்.

எங்களால் சேகரிக்கப்பட்டுள்ள அறிக்கைகளுக்கமைய 15 தொடக்கம் 24 வயதுக்கிடைப்பட்டவர்களே எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது. அதனால், இளைஞர்களுக்கு பாலியல் கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.

பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளினால் 90 வீதமானோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகின்றது. இந்த தொற்று ஏற்பட்டு 12 வருடங்கள் கடக்கும்போது எயிட்ஸ் நோய் நிலைமை உருவாகின்றது. இருந்தபோதிலும், சரியான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோய் நிலைமைக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.
15 தொடக்கம் 24 வயதுடையவர்களுக்கே H.I.V தொற்று அதிகரித்துள்ளது... இளைஞர்களுக்கு பாலியல் கல்வியை கொடுக்க வேண்டியது அவசியம். 15 தொடக்கம் 24 வயதுடையவர்களுக்கே H.I.V தொற்று அதிகரித்துள்ளது... இளைஞர்களுக்கு பாலியல் கல்வியை கொடுக்க வேண்டியது அவசியம். Reviewed by Madawala News on December 02, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.