எங்கள் பக்கம் தவறு உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன் : ஶ்ரீதரன் MPமாகாணசபை தேர்தலை கடந்த நல் லாட்சி அரசு நடத்தவில்லை. அந்த அரசுக்கு முண்டு கொடுத்த நாமும்

அதனை வலியுறுத்தவில்லை என்பதனை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றேன். அது எங்கள் பக்கம் உள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றேன் என பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் தமிழ் தேசியயக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச் தேசிய மரபுரிமைகள், அருங்கலைசுகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபை கள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசி யலமைப்பில் ஒரு திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் எதுவும் நடத்தப்படாது எனத் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந் துள்ளன.


மாகாணசபை தேர்தலை கடந்த அரசு நடத்தவில்லை. அந்த அரசுக்கு முண்டு கொடுத்த நாமும் அதனை வலியுறுத்த வில்லை என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றேன். அது எங்கள் பக்கம் உள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றேன்.


அந்த அரசு விட்ட தவறை நீங்களும் விடப் போகின்றீர்களா? கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று இரு வருடங்கள் முடிந்து விட்டன. பிரதமரின் காலம் ஒரு வருடம் முடிந்து விட்டது.


நாங்கள் விட்ட தவறை நீங்களும் செய் வதென்றால் எங்களைப் போன்று தானே நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் இந்த மாகாணசபைத்தேர்தல்களை நடத்தலாம் தானே என்றார்.

எங்கள் பக்கம் தவறு உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன் : ஶ்ரீதரன் MP எங்கள் பக்கம்  தவறு உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன் : ஶ்ரீதரன் MP Reviewed by True Nation on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.