ஹெல உள்நாட்டு மருத்துவத்தை ஏற்றுக்கொள்வோம், நாளைய உலகை வெற்றிகொள்வோம்!



நாடொன்றின் நல்வாழ்விற்கான காரணிகளில் தேசிய சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

நாடொன்றின், தேசிய சுகாதார கட்டமைப்பு மற்றும் அதனை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்ல அதுவே காரணமாகும். சமூக மக்களின் நலன் நிறைந்த சுகாதாரத்திற்காக விசேட கவனம் செலுத்தி, அதற்காகவே செயற்படுகின்ற விசேட நடைமுறைகள் மற்றும் திட்டங்களை வகுப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும். அதன்போது சாதாரண மக்களை விட அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியமானது, சுகாதார, நலன்புரி தொடர்பாக விசேட அறிவு மற்றும் பயிற்சி பெற்றவர்களிலேயே தங்கியுள்ளது. மக்களின் நல்வாழ்விற்காக சுகாதார திட்டங்;கள் பயன்பட வேண்டிய விதம் தொடர்பாக உரிய முறையில் அறிந்துகொண்டு, அவற்றை செயற்படுத்த வேண்டிய விதம் தொடர்பாக அறிவுறுத்தும் அத்தகையவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஊடாக மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவை, வழிகாட்டி நடைமுறைகள் போன்ற அனைத்தையும் ஒன்றிணைத்து உலகம் முழுவதுமுள்ள தமக்கேயான மருத்துவ துறைகள் பல மனித வரலாற்றில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஏதாவதொரு நாட்டில் முழுமையான சுதேச என அறியப்படும் தேசிய சிகிச்சைகள், மருந்துகள், கைமருந்து மற்றும் நம்பிக்;கை அதில் உள்ளடங்கும் என்பது உண்மையே. அதேபோல், தொன்றுதொட்டு பல்வேறு நாடுகளில் காணப்பட்ட, அந்நிய ஆக்கிரமிப்பு, இடம்பெயர்வு போன்ற காரணிகளால் வேறு நாடுகளிலுள்ள சிகிச்சை முறைகளுடன் கலந்த மருத்துவ சம்பிரதாயம் உலகம் முழுவதும் காணக் கிடைக்கின்றது. நூற்றாண்டு காலமாக நிலவி வந்த அத்தகைய அநேக சிகிச்சை முறைகள் இயற்கையுடன் நெருங்கி பழகிய சூழலியலாளர்கள், சுகாதார நேயமிக்கவர்கள் வைத்தியத் துறையில் உயர் கௌரவத்திற்கு உரியவர்களாகியுள்ளனர். இவை அனைத்திற்கும் மேலதிகமாக, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் விஞ்ஞான சிந்தனை ஊடாக ஊடுருவிய மேற்கத்தைய மருத்துவ விஞ்ஞானம் எனப்படும் ஆங்கில மருத்துவம் உலகம் முழுவதும் அதிக பிரபல்யமடைவதற்கு காரணம் அதிலுள்ள முன்னேற்றமடைந்த குளிசைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை இலகுவாகவும் வேகமாகவும் பெற்று சிகிச்சை அளிக்க கூடிய பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தியே ஆகும். அதுமாத்திரமல்ல, இன்று உலகில் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையை கொண்டுள்ள அநேகர் மேற்கத்தைய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக நம்பிக்கை வைத்துள்ளமைக்கு காரணம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இடம்பெறுகின்ற ஆய்;வுகள் மற்றும் அவற்றை செயற்படுத்தி பார்க்கும் செயன்முறை மற்றும் முறையாக செயற்படுத்தப்படுகின்ற சிகிச்சை தொடர்களின் மருத்துவ திட்டமாக ஏற்றுக்கொள்வதால் ஆகும்.

எவ்வாறாயினும், அநேக நாடுகளிலுள்ள உள்ளுர் வைத்திய சிகிச்சை முறைகளானது வெளிப்படையாக எளிமையானதாகவும் இலகுவாக கடைபிடிக்கக்கூடிய திட்டங்களாக தோன்றினாலும், அதன் பின்னணியில் நீண்ட கால ஆய்வுகள், செயன்முறை பயிற்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் பல இருப்பதற்கான சாட்சிகள் உண்டு. விசேடமாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ளுர் மருத்துவ சிகிச்சை திட்டங்கள் சில நேரம் மேற்கத்தைய விஞ்ஞான அடிப்படைத் தத்துவங்கள் ஊடாக எட்ட முடியாத அளவுக்கு ஆழமானவை. செயற்திறன் மிக்கவை. உலக வரலாறு முழுவதும் அத்தகைய உள்ளுர் மருத்துவ சிகிச்சை முறை ஊடாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை உரிய முறையில் விளங்கிக்கொள்வதற்கு எந்தவொரு வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப இயந்திரத்தாலும் முடியாது போயுள்ளது என்பதற்கு உதாரணங்கள் உண்டு. அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் பரவிய கொவிட் எனப்படும் கொரோனா போன்ற வைரஸ் தொற்று முன்னிலையில் மிக வளர்ச்சியடைந்த மேற்கத்தைய மருத்துவ விஞ்ஞான சிகிச்சை முறை கூட பின்தங்கியுள்ள நிலையில், பாரம்பரீய உள்ளுர் மருத்துவ சிகிச்சை முறைகளில் உள்ள மர செடி கொடிகளில் இருந்து பெறப்பட்ட பூ, காய் இலைகள் போன்ற இயற்கை மருந்துகள் ஊடாக பாதுகாப்பை பெற்றுக்கொண்ட நாடுகள் தொடர்பாகவும் அண்மையில் அறியக் கிடைத்தது. அத்துடன் உள்ளுர் ஓளடத மற்றும் சிகிச்;சை தொடர்பாக அநேகர் மீள சிந்தித்து செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.


உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மிக பழமையான மற்றும் வியக்கத்தக்க உரிமை கொண்ட உள்நாட்டு ஓளடத மற்றும் சிகிச்சை முறை கொண்ட ஹெல மருத்துவம் எனும் பாரம்பரீய மருத்துவ திட்டம் செயற்பாட்டில் உள்ளது. ஆயிரக்கணக்கான வருட வரலாற்றை கொண்ட இம் மருத்துவ முறை உள்நாடு வெளிநாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் பலவற்றை உள்ளடக்கியது என்றால் அது மிகையல்ல. ஆரம்ப கட்டமாக இயற்கை சூழலிலிருந்து கண்டெடுக்கப்படும் மூலிகை பகுதிகளை பயன்;படுத்தி, பரம்பரை பரம்பரையாக வருகின்ற கலையில் அமைந்துள்ள மருத்துவம் ஊடாக நோய் அறிகுறிகளுக்கு மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சிகிச்சை வழங்குவதும் இதன் முக்கிய அம்சமாகும். பெரும்பாலும் இந்திய தொடர்புகொண்ட ஆயர்வேத மருத்துவ விஞ்ஞானம் மற்றும் இலங்கையின் பாரம்பரிய மருத்துவம் என்பது இரண்டாக அல்லாமல் ஒன்றாக அறியப்படுவதாக காணப்படடாலும், இலங்கைக்கே உரிய, பாரம்பரிய மருத்துவம் என்பது புராதன இலங்கையின் உள்ளுர் மருத்துவ விஞ்ஞானம் என்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றுகள் உள்ளன. இருந்தாலும் இந்திய ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞானத்திற்கு சொந்தம் கூறும் கூறுகள் கொண்ட இலங்கை உள்நாட்டு மருத்துவ திட்டத்தில் அதற்கே உரிய விசேட தன்மைகளை இனங்காண முடியும். தற்போது இலங்கை ஆயுர்வேத சம்பிரதாயமாக புகழ்பெற்றுள்ள ஹெல மருத்துவ சிகிச்சை முறை, இந்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருந்து சிசிச்சை, அராபி ஊடாக பரவலடைந்து சென்ற கிரேக்கத்தின் யுனானி போன்று இலங்கையின் சிகிச்சை முறையாக காணப்படுகின்ற உள்ளுர் சிகிச்சை ஆகிய அனைத்தினதும் கலவையே.


இலங்கையின் தேசிய மருத்துவ முறையானது அடிப்படையாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக பரம்பரை வழிவந்த மருந்து சேர்க்கைகள் ஊடாகவே பரவியது. இலங்கை வரலாற்றில் மருத்துவர்களாக போற்றப்பட்ட மன்னர்களின் அனுசரணை மற்றும் பங்களிப்பு இந்த மருத்துவ துறையின் நீடிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியமான சான்றாக இருந்ததென குறிப்பிடப்படுகின்றது. அவற்றில் மிக சிறப்பான பங்களிப்பை வழங்கிய புத்ததாச மன்னன் உள்ளுர் மருத்துவத்துவத்தை சார்ந்த அடிப்படை ஒழுங்குமுறைகள் மற்றும் விதிமுறைகளை நிறுவுவதில் பாரிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது. சிகிச்சை வழங்க முன்னர் நோயாளர்களின் அனுமதியை அதற்காக பெறுதல் மற்றும் பண்டைய ஒருங்கமைப்பிற்கு அமைய மருந்துகளை உற்பத்தி செய்ய முன்னர் உரிய அனுமதியை பெறுதல் போன்ற காரணிகள் தொடர்பாக அவர் கவனம் செலுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புராண இலங்கையின் மாமன்னராக கூறப்படும் இராவண மன்னரும் உள்ளுர் மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய ஊசிவழி-அழுத்த வைத்தியத்தில் கைதேர்ந்தவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணவன் வழித்தோன்றலான மகரிஷி புலஸ்தி ஆயிர வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இடம்பெற்ற உலக மாநாட்டில் தேசிய மருத்துவம் தொடர்பான பிரதானியாக செயற்பட்டதாக கூறப்படுகின்றது. தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, 40,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகரீகங்கள் பற்றிய ஆராய்ச்சி தரவுகளின் மூலம் வெளிப்படையாகும் விபரங்களுக்கு அமைய, ஹெல மருத்துவத்தின் ஆரம்பம் இலங்கையின் முதல் நாகரீகம் உருவான காலம் வரை நீண்டு செல்வதாக யூகிக்கப்படுகின்றது.


பல நூற்றாண்டு காலமாக இலங்கையில் மிக கிரமமாகவும் சரியான முறையிலும் செயற்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் காணப்பட்டதாக கல்வெட்டுக்களில் ஆதாரங்கள் உள்ளன. மிருகங்களுக்கு கூட சத்திர சிகிச்சை செய்யும் திறன் கொண்ட வைத்தியசாலைகள் நிலவிய உலகின் முதலாவது நாடாக இலங்கை அறியப்பட்டது. உலகின் முதலாவது வைத்தியசாலை என நம்பப்படுகின்ற இடத்தின் இடிபாடுகள் மிகுந்தலை பிரதேசத்தில் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. புராதன உள்ளுர் (ஹெல) மருத்துவம் ஊடாக சிகிச்சை வழங்கப்பட்ட இன்னும் பல வைத்தியாலைகளில் இடிபாடுகள் கிடைக்கப்பெற்;றுள்ளதுடன், அவை அனைத்தும் ஊடாக எமக்கு எடுத்துரைப்பது யாதெனில், தொன்றுதொட்டு எமக்கு வளர்ச்சியடைந்த மருத்துவ சிகிச்சை முறை இலங்கையில் இருந்ததேயாகும். பல்வேறு காரணங்களுக்காக எமது நாட்டின் மருத்துவ சிகிச்சை முறை தொடர்பான கவனம் சில காலமாக காணக்கிடைக்காதபோதிலும், அண்மையில் உலகம் முழுதும் வியாபித்த வைரஸ் தொற்று காரணமாக பாரிய உயிர்கள் எம்மைவிட்டு பிரிந்த நிலைமை தோன்றியுள்ளதுடன் மேற்கத்தைய மருத்து விஞ்ஞானம் சிகிச்சை முறை மற்றும் மருந்து ஊடாக தீர்வு காண முடியாத அநேகர் உள்;ளுர் ஒளடத மற்றும் சிகிச்சை முறைக்கு மீள திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். உண்மையிலேயே இது சிறந்த முன்னேற்றமாகும். உள்ளுர் ஓளடத மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகளை கொண்ட ஹெல வைத்திய முறையானது ஆரம்ப காலம்  முதலே இந்நாட்டு மக்களின் வாழ்க்கையை குணப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இருந்த மிக வெற்றிகரமான மற்றும் செயற்திறன் மிக்க சிகிச்சை முறையாகும். இயற்கை சூழலிலிருந்து பெறும் ஒளடத தாவர பாகங்கள் (மூலிகைகளை) பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒளடதம் ஊடாக நோயார்களை குணப்படுத்தும் திறன் கொண்ட இந்த மருத்துவ முறை தொடர்பாக மீளவும் சிந்;தித்து பார்க்க வேண்டிய காலம் வந்துள்ளது என்பது தெளிவாகிறது. பக்க விளைவுகள் கொண்ட ஏனைய சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு மருத்துவ முறையாகிய ஹெல வைத்தியம் ஊடாக உடலுக்கு எவ்வித தீங்குமற்ற இயற்கை மருத்துவ சேர்க்கைகள் ஊடாக குணப்படுத்துவதே.


ஹெல மருத்துவத்திற்கான ஒளடதமாக பயன்படுத்தப்படும் மூலிகைகள் தனித்தனியாகவோ அல்லது மூலிகைகளின் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்;பட்டோ பாவனைக்கு எடுக்கப்படும். அந்த ஒளடதங்களை தயாரிக்க வேண்டிய முழுமையான விபரங்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள் ஏராளம் இலங்கையில் உள்ளது. தொன்றுதொட்டு இலங்கையின் உள்நாட்டு மருத்துவ முறை ஊடாக வழங்கப்படும் பல்வேறு சிகிச்சை முறைகள் பாரம்பரீயமாக ஹெல வைத்தியத்தில் சேவை புரிந்த மருத்துவ பரம்பரைகளின் ஓலைச் சுவடிகளிலும் உள்ளன. அவற்றில் காணப்படும் தகவல்களை மையப்படுத்தி செயற்படுத்தப்படும் சம்பிரதாய சிகிச்சை முறைகளில் முதன்மையாக உடல் தொடர்பாகவே அதிக கவனம் செலுத்துகின்றது. அநேக நவீன மருத்துவ முறைகள் போன்று வெவ்வேறாக உடல் உருப்புகளுக்கு அனேகமாக வெவ்வேறாக சிகிச்சை செய்யப்படுவதில்லை. அத்துடன் உள்ளுர் மருத்துவ முறைகளில் உள்ளடங்கும் ஒளடதங்களின் செயற்பாடானது ஒட்டுமொத்த உடலிற்கே அதன் விளைவை ஏற்படுத்தும் வகையிலாகும். ஆகையால் ஹெல மருத்துவத்தின் மொத்த செயற்பாடானது, உடலை ஊடுருவி குணப்படுத்தும் சிகிச்;சை முறை கொண்ட இம் மருத்துவத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆச்சரியமான தன்மையானது ஆய்வுக்கூட அல்லது மருத்துவ ஆய்வுகள் மூலம் அறிந்துகொள்ள முடியாத அளவு சிக்கலானது மற்றும் ஆழமானது. அத்துடன் ஹெல மருத்துவத்தின் மற்றுமொரு சிரப்பானது நபரொருவரின் உள, உடல் மற்றும் ஆன்மீக சுகம் தொடர்பாகவும் கவனம் செலுத்துவதாகும். நோய் குணப்படுத்தலின் போது குறிப்பிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவது ஹெல மருத்துவம் பின்பற்றும் பிரதான காரணியாகும். சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்க நபரொருவருக்கு வழங்க வேண்டிய உடல், உள மற்றும் ஆன்மீக சுகம் தொடர்பாக கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்துவத்தை ஹெல மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகளில் அதனாலேயே ஆர்வம் செலுத்தப்படுகின்றது.


அநேக நோய் எதிர்ப்பு மூலிகைகள் மற்றும் சிறந்த பெறுபேற்றை தரக்கூடிய மருத்துவமாக உயர் வரவேற்பு மற்றும் நம்பிக்கை கிடைக்க வேண்டிய ஹெல உள்நாட்டு மருத்துவம், அண்மைக்காலத்தில் பல காரணங்கள் காரணமாக அவதூறான நிலைமைக்கு   தள்ளப்பட்டுள்ளமை இரகசியமல்ல. இந்த உயர் சாஸ்திரத்தின் உண்iமான தன்மையானது புரிந்துணர்வுக்கு உட்படாமை, பொருளாதார மற்றும் ஏனைய குறுகிய நலன்களை பெறும் நோக்கில் கடந்த காலங்களில் அநேகர் ஊடாக செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் ஊடாக ஹெல உள்நாட்டு மருத்துவம் தொடர்பான நன்மதிப்பானது கெடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. அத்தகைய பிரச்சார திட்டங்களின் பெறுபேறாக எவ்வித விஞ்ஞான அடிப்படையுமற்ற வணிக உற்பத்திகள் சிறந்த மருந்துகள் என அடையாளப்படுத்தப்பட்டபோதிலும், இறுதியாக அவை அனைத்தும் வெற்று பேச்சுக்களே என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்று அத்தகைய உற்பத்திகள் ஊடாக சமூக, அரசியல் மற்றும் சுகாதார அபாயத்தை இலங்கை மக்கள் வாழ்க்கையில் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது. உள்ளுர் சந்தைக்கு உரிய மருந்து என தெரிவிக்கப்பட்ட அத்தகைய வணிக உற்பத்திகளுக்கு உயர் சந்தைக்கு தெரிந்தோ தெரியாமலோ செயற்பட்ட அநேகர் இருந்தனர். உள்நாட்டு மருத்துவம் என்ன என்பதை உரிய முறையில் அறிந்துகொள்ளாமல் செயற்பட்ட அவர்கள் தற்போது மனம் வருந்துகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும் அவர்களின் செயற்பாடு காரணமாக ஹெல மருத்துவம் அல்லது அதனுடன் இணைந்த சாஸ்திரத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படாமைக்கு காரணம் இன்னும் உள்நாட்டு ஹெல மருத்துவம் தொடர்பாக நம்பிக்கை வைத்துள்ள அநேகர் இருப்பதே ஆகும். தேசிய மருத்துவம் என்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சேர்த்துக்கொள்ள வேண்டிய, எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டிய மருத்துவ சம்பிரதாயம் என்பதை அவர்கள் நம்புகின்றனர். அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.


கொடிய கொவிட் எனப்படும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக தற்போது தோன்றியுள்ள பாரிய நிலைமையின் கீழ் சிறந்த ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க நாடென்ற வகையில் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். அதன்போது எம்மவர்களுக்;கே உரிய ஹெல மருத்துவம் ஊடாக நாம் நம்பிக்கையுடன் கைகோர்த்து முன்நோக்கி செல்ல வேண்டும். வியக்கத்தகு குணம் கொண்ட ஹெல உள்ளுர் மருத்துவத்துடன் நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக நம்பிக்கையுடன் அணிதிரள வேண்டியது எம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

ஹெல உள்நாட்டு மருத்துவத்தை ஏற்றுக்கொள்வோம், நாளைய உலகை வெற்றிகொள்வோம்!  ஹெல உள்நாட்டு மருத்துவத்தை ஏற்றுக்கொள்வோம், நாளைய உலகை வெற்றிகொள்வோம்! Reviewed by Madawala News on October 27, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.