நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் தற்போது உரப் பிரச்சினை காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கின்றது. 


அதனடிப்படையில் நீங்கள் உர பிரச்சினை தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்டத்தில் மஹதிவுல்வெவ-திவுறும்கல விகாரையில் சனிக்கிழமை (23) தியான மண்டபத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


கடந்த போகத்தின் போது முதல் வாரத்தில் பசளையை தடை செய்யப் போவதாக ஊடகங்களில் வெளியானதையடுத்து நான் தனிப்பட்ட முறையிலும், பாராளுமன்ற குழுவின் ஊடாகவும் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தினேன். ஆனாலும் நான் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. 


அதனாலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அமைச்சராக, ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் சேதனப் பசளை ஊக்குவிக்கும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். இருந்தும் உடனடியாக சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


5 அல்லது 10 வருடங்கள் காலம் தாமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


(ரொட்டவெவ குறூப் நிருபர்)

நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது Reviewed by True Nation on October 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.