புதிய விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம்.


 (இராஜதுரை ஹஷான்)

கோதுமை மா, இறக்குமதி செய்யப்படும் பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய

பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது.


இந்லையில் புதிய விலை அறிவிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் புதிய விலைக்கு மேலதிக  பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.


வர்த்தகத்துறை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம். புதிய விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம். Reviewed by Madawala News on October 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.