மத்தியவங்கி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது, நாட்டில் வாகனங்களின் விலை குறைவடையும்.



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் விரும்பிய 
வாகனங்களை நாட்டுக்கு கொண்டுவரும் போது, அவர்களுக்கு சலுகையொன்றை வழங்குவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வாகனங்களை கொண்டுவரும் போது அதற்காக அறவிடப்படும் வரிகளை டொலரில் செலுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தான் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது, நாட்டில் வாகனங்களின் விலை குறைவடையும் என்பதோடு, டொலர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
மத்தியவங்கி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது, நாட்டில் வாகனங்களின் விலை குறைவடையும். மத்தியவங்கி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது,  நாட்டில் வாகனங்களின் விலை குறைவடையும். Reviewed by Madawala News on October 02, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.