இன்றைய வானிலை அறிக்கை விபரம்..



மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்
 அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km இலும் கூடிய வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இப் பிராந்தியங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்
**************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி,மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆகையினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
இன்றைய வானிலை அறிக்கை விபரம்.. இன்றைய வானிலை அறிக்கை விபரம்.. Reviewed by Madawala News on June 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.