மக்களை விழிப்பூட்ட நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற் கொள்ளவுள்ளோம்.



இன்று(16) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற 
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள்.


பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பொர்னாட்டோ அவர்களுடைய உரைக்கு ஜனாதிபதியாக நன்தசேன ராஜபக்‌ஷ பதில் வழங்கிய விதம் பிழையானதாகும்.


ஹரீன் பேசியது நல்ல விடயங்களை. நாட்டின் உன்மையான நிலை குறித்து பேசியிருந்தார்.அதற்கு தீர்வுகள் வழங்க கவனம் செலுத்துவதை விட்டு அச்சுறுத்தும் விதமாக பதில் வழங்குகிறார்.அவரின் அச்சுறுத்தலில் ஒர் பயம் உள்ளது.அவர் பாதுகாப்புச் செயலாளராக செயலாற்றிய போது இடம் பெற்ற சம்பவங்களை மக்கள் மறந்திறக்க மாட்டார் என நம்புகிறோம்.


இரட்டை முகம் தனக்கு இருப்பதாக தெரிப்பதன் மூலம் பாதுகாப்புச் செயலாளராக இருந்த இரட்டை முகம் போல் ஜனாதிபதியாகவும் இரட்டை கதாபாத்திரங்களை ஏற்பதற்கான ஆரம்ப சமிஞ்சையைத் தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது தான் யுத்தம் நிறைவடைந்து, ஆனால் 90 வீத கௌரவம் அப்போதைய இரானுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையுள்ள சகல படையினரையும் சாரும்.


அரசியல் ரீதியான தலைமைத்துவம் வழங்கியதற்காக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஒர் கௌரவம் இருப்பதை நாங்கள் இல்லை என்று கூற மாட்டோம்.

ஆனால் அந்தக் காத்தில் இடம் பெற்ற சில நிகழ்வுகள் குறித்து நேரடியாக கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு விமர்சனங்கள் உள்ளன.

அவ்வாறு இரட்டை முகம் இருப்பதாகக் கூறி தற்போதும் தனக்கு அவ்வாறு மாறமுடியும் என்று கூறுவதன் மூலம் எதிர்க் கட்சியின் குரலை கட்டுப்படுத்த பயம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.


இதனைக் கண்டித்து மக்களை விழிப்பூட்ட நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற் கொள்ளவுள்ளோம்.


பாதுகாப்பு அங்கிகளை அனிந்த வன்னம் சுதந்திர சதுக்கத்திற்கு முன்னர் நாங்கள் ஆரப்பாட்த்தை ஆரம்பித்தோம்.


இன்று நாட்டில் பிரஜைகளுக்கு சுயாதீனமாக செயற்ப்பட முடியாத நிலையும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கும் நிலை இல்லாமலும்,சிவில் சமூகப் பிரதி நிதிகளுக்கு சுயாதீனமாக செயற்பபட முடியாமலும் இருக்கிறது.


ஜனநாயக ரீதியாக மனிதாபிமா ரீதியாகவும் செயற்பட வேண்டிய ஒர் ஜனாதிபதி ஒர் ஏகாதிபத்தியவாதியாகவும், பசிஸ்ட் வாதியாகவும் செயற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.


ஒர் ஜனாதிபதியாக ஆசியாவில் விசாலமான டயர் உற்பத்தி சாலையை திப்பதற்காக சென்றார்.ஆனால் அவர் கடந்த காலங்களை மறைந்தவர் போல் செயற்படக் கூடாது.நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.மன்னாரில் அன்மையில் திறந்த கற்றலை மின் உற்பத்தி நிலைய நிர்மானமும் நல்லாட்சி அரசாங்கத்தினுடையது.


2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ தான் இதை ஆரம்பித்தார் என்ற தேனியில் டலஸ் அலகப் பெரும திறப்பு விழாவில் கூறியிருந்தார்.டயர் உற்பத்தி சாலையின் சகல நடவடிக்கைகளும் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்ததாகும்.


நல்லாட்சியின் வெளிநாட்டு முதலீட்டு திட்டத்தின் ஒர் செயற் திட்டம்.மலிக் சமர விக்ரம அவர்கள் அமைச்சராக இருந்ததாலயே இது உருவாகியது என்பது எனது நம்பிக்கை.


உருவாக்கும் போது இடம் தொடர்பாக பல பிரச்சிணைகளை அப்போதைய எதிர்க் கட்சியினராக இருந்தவர்கள் ஏற்படுத்தினர்.பல பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.முதலீட்டாளர்கள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தனர்.


சவால்களுக்கு மத்தியில் மலிக் சமர விக்ரம இதை யாதார்த்தப்படுத்தினார்.நானும் இராஜாங்க அமைச்சராக அதில் பங்கேற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.


8 மொகா வோட் அளவு மின்சாரம் வழங்கினோம். நீர் வளங்களை வழங்கினோம்,பாதை ஒழுங்கிற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டோம்.இந்த அரசாங்கத்திற்கு மீதமிருந்தது 2 கிலோ மீட்டர் பாதையை நிர்மானுப்பது தான்.


நேற்று திறப்புவிழாவுக்குச் சென்றவர்களால் அந்த 2 கிலோ மீட்டர் பாதையைக் கூட நிர்மானிக்க இல்லை .

ஒருவருடத்துக்குள் 2 கிலோ மீட்டர் பாதையைக் கூட நிர்மானிக்க முடியாமல் வெட்கமல் இல்லாமல் சென்று திறப்பு விழாவிற்கு சென்றனர்.


ரொஹித விமல் போன்றவர்கள் ்அங்கு சென்றிரைந்தனர்.


ரொஹித பாராளுமன்றத்தில் ஒர் சிறிய டயரைக் கொண்டு வந்து இழிவுபடுத்தியவர்.இதனை சாத்தியப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறாமல் ஜனாதிபதி இவ்வாறு சென்று திறப்பார் என்று நாங்கள் நினைக்க வில்லை.ஹம்பந்தோட்டை சீமந்து உற்பத்தி சாலை இன்னும் ஆறு ஏழு மாதங்களில் திறக்கப்படலாம்.


ஹம்பந்தோட்டை சுதந்திர வர்த்தக வலயத்தை நிர்மானிக்க போன போது ராஜபக்‌ஷவர்கள் எங்களுக்கு கல் அடித்தனர்.வொக்ஸ்வேகன் (வெஷ்டர்ன் ஒடோ மொபைல்)கார் உற்பத்தி சாலையும் கிட்டிய காலங்களில் திறப்பர்.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச் சாட்டில் ரன்ஞன் ராமநாயக்க அவர்களை நான்கு வருட கடூழிய தன்டையுடன் சிறைப்படுத்தியுள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பிற்க்காக பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பார் என்ற விடயத்தில் அரசியலைமைப்பில் தெளிவான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்று தான் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.


இதன் மூலம் பாராளுமன்ற வரப்பிரசாதங்களின் பிரகாரம் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.இன்று பல ஊடகங்கள், பாராளுமன்ற உளுப்பினர்கள்,பத்திரிகைகள் எல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதான பல செய்திகளை உருவாக்குகின்றனர்.இவை இதில் உள்ளடங்காதா என்று வினவுகிறோம்.


ரன்ஞன் ராமநாயக்கவின் விடுதலைக்காகப் போராடுவோம்.சபாநாயகருக்கு இது குறித்து தெரியப்படுத்தியிருக்கிறோம்.அவர் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் அபிப்பிராயம் கோருவார்.


அதன் பிரகாரம் செயற்பபடவுள்ளோம்.அதே போல் இன்று நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடும் நபர்களுக்கொதிராக சட்ட நடவடிக்கையெடுக்க சட்டத்தரணிகள் குழுவென்றை உருவாக்க என்னியுள்ளோம் என்று கூறினார்.


கொரோனா விடயம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக;


கொரோனாவில் அரசியல் செய்ததால் இன்று ஏற்ப்பட்ட நிலை குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும்.

நாளாந்த கூலித் தொழிளாலிகளின் வாழ்வாதாரங்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கப்பட்ட வேண்டும் என்றும் தடுப்பூசி விடயத்தில் நம்ப முடியாத ஒர் நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞான ரீதியான முடிவுகளை ஏற்க அரசாங்கம் பின் நிற்பதாகவும் சுட்டிக் காட்டினார்.


மக்களை விழிப்பூட்ட நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற் கொள்ளவுள்ளோம்.  மக்களை விழிப்பூட்ட நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற் கொள்ளவுள்ளோம். Reviewed by Madawala News on January 16, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.