80% வீத தனியார் வகுப்புகள் ஆசிரியரகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த அரசுக்கே வாக்களித்தனர். ஆனால் எமது பிரச்சினைக்கு தீர்வு தராமல் உள்ளார்கள்.


சுதந்திர தனியார் போதனா ஆசிரியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் ஹெம்ப் பிரிய கவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,


கடந்த காலங்களில் எதிர்க் கட்சித் தலைவர் கடந்த ஐனவாரி மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 27/2 நிளையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தேசியப் பிரச்சினையாக கருதி தனியார் போதானா ஆசிரியர்களின் பிரச்சிணைகளை தரவுகளுடன் முன்வைத்திருந்திருந்தார்.இதனால் ஆசிரியர்களுக்கு உற்சாகம் ஏறப்பட்டது. தனியார் வகுப்பு ஆசிரியரகளின் பிரச்சிணை குறித்து பாராளுமன்றத்தில் பேசியது இது தான் வரலாற்றில் முதல் சந்தர்ப்பம். 

பாராளுமன்ற உறுப்பினரகள் மூன்று நான்கு போர் இருக்கிறாரகள் தனியார் வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் மற்றும் அதனால் பாராளுமன்றம் வந்தவர்கள்.அவர்கள் கூட குரல் கொடுக்காத போது, அவ்வாறானவர்கள்  பலர் இருக்கும் போது, எதிர்க் கட்சித் தலைவர் இது குறித்து பேசினார். அதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.சிறிய தாய்ககுள்ள கவனிப்பு போலான நிலைப்பாடு தான் அரசாங்கத்திடம் எங்களைப் பற்றி இருந்தது.அரசாங்கத்திற்கு பல தடவைகள் கூறியும் நடவடிக்கை எடுக்காதவர்கள் எதிர்க் கட்சித் தலைவரை சந்தித்த பிறகு துரிதமாக, வரையறைகளுடன் அனுமதி வழங்கினார்கள்.

 நாட்டின் கல்வித் திட்டத்தில் இதுவும் ஒர் பகுதியாகும். 80% வீத தனியார் வகுப்புகள் ஆசிரியரகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சிக்கே ஆதரவளித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன சேகர அவர்கள்  முக நூல் பதிவில் பிழையாக பதிவிட்டுள்ளனர்.தனியார் வகுப்பு ஆசிரியர்கள் எதிர் காலங்களில் ஏதேனும் பிரச்சிணைகளுக்கு முகம் கொடுக்கும் பட்ச்சத்தில் அவைகளை  எதிர்க் கட்சித் தலைவர் மூலமே தீர்வு கானும் மாறு கூறியிருக்கிறார்.இவை பிழையான முக நூல் பதிவுகளாகும்.பொதுத் தேர்தலுக்கு முன்னர் எங்களை அடிக்கடி சந்திக்க முடியுமானவர்களுக்கு தேர்தலுக்கு பின்னர் நாங்கள் பாரிய பிரச்சிணைகளுக்கு முகம் கொடுத்துள்ள ஒர் சந்தர்ப்பத்தில் எங்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்குக் கூட பதிலளிக்க முடியாதவர்களாக இருப்பதையிட்டு மனம் வருத்துவதாக குறிப்பிட்டார்.

தேசிய அமைப்பாளர் லசந்த பண்டார கருத்துத் தெரிவிக்கையில்;


முதலாம் அலையின் போதும் நாங்கங்கள் தான் சகல தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்காகவும் குரல் கொடுத்தோம். தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கும் குடும்பம் பெற்றோர்கள் என பலர் இருக்கின்றனர். இவர்களுக்கும் வாழ்வாதாரம் என்று ஒன்று உள்ளது.இவர்கள் குறுத்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.சினிமா அரங்குகள் திருமண மண்டபங்கள் திறக்கப்ட்டு 150,200 பேர் அனுமதிக்கப்பட்டுகின்றனர்.ஆனால் தனியார் வகுப்புகளுக்கு இடமளிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். மேல் மாகணத்தில் தனி நபர் வகுப்புகளை ஆரம்பிக்க இடம் தந்தால் நல்லது.அரசாங்கமும் ஜனாதிபதியும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.இதனை ஜீவனோபாயமாகக் கொண்ட பலர் இருக்கின்றனர்.சஜித் பிரேமதாச அவர்களின் தலையீட்டில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க முன்வந்தது நல்லது. அதற்காக அவருக்கு நன்றி. அரசாங்கத்திற்கு 

தடையாக நாங்கள் இல்லை. பரீட்சை மையமாகக் கொண்ட ஒர் கல்விக்கொளகை உள்ள ஒர் நாட்டில் தனியார் வகுப்பு ஆசாரியர்கள் முக்கியமானவர்கள். பிரபு குடும்பங்களில் பலர் இரகசியமாக தனியார், தனி நபர் வகுப்புகளை, ஆசிரியர்களைக் கொண்டு நடத்துகின்றனர் என்றார்.

80% வீத தனியார் வகுப்புகள் ஆசிரியரகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த அரசுக்கே வாக்களித்தனர். ஆனால் எமது பிரச்சினைக்கு தீர்வு தராமல் உள்ளார்கள். 80% வீத தனியார் வகுப்புகள் ஆசிரியரகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த அரசுக்கே வாக்களித்தனர். ஆனால்  எமது பிரச்சினைக்கு தீர்வு தராமல் உள்ளார்கள். Reviewed by Madawala News on January 18, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.