'நிவர்' சூறாவளி இலங்கையை நோக்கி நகர்கிறது : வளிமண்டலவியல் திணைக்களம்



நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி காங்கேசந்துறை கடற் பிரதேசத்தில் இருந்து 325 கி.மீ தூரத்தில் கடற் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நேற்று மாலை 5.30 மணியளவில் இது காங்கேசந்துறையில் இருந்து 263 கி.மீ தூரத்திலும், இன்று காலை 5.30 மணியளவில் 168 கி.மீ. தூரத்திலும் நிலைகொள்ளக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த காற்று எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் சூறாவளியாக உருவெடுக்கும் என்றும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் தலைமை அதிகாரி ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.


இந்த பிரதேசங்களில் கடும் காற்றை எதிர்பார்க்க முடியும். 48 - 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டதிலும் கடும் காற்றுடன் மழையும்; பெய்யக்கூடும்.


புத்தளத்தில் இருந்து மன்னார் காங்கேசந்துறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியத்தில் கடற்றொழிலாளர்கள் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தற்பொழுது இந்த கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்போர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புத்தளத்தில் இருந்து கொழும்பு உடாக மாத்தறை வரையான கடற் பகுதியில் மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தானது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வடக்கு மாகாண மக்கள் மிக அவதானத்துடன் செய்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 100 மி;.மீ ற்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இந்த பகுதியில் பதிவாகக் கூடும். நிவர் சூறாவளியின் தாக்கம் நாளை மறுதினம் வரையில்
இடம்பெறக்கூடும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
'நிவர்' சூறாவளி இலங்கையை நோக்கி நகர்கிறது : வளிமண்டலவியல் திணைக்களம் 'நிவர்'  சூறாவளி இலங்கையை நோக்கி நகர்கிறது : வளிமண்டலவியல் திணைக்களம் Reviewed by Madawala News on November 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.