பிரதமரின் புதல்வருக்கு கொரோனா தொற்று என வெளியான தகவல் தொடர்பில் விமானப் படையின் ஊடகப் பணிப்பாளர் விளக்கம் !! ;



பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்ஸவுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரோஹித ராஜபக்ஸ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இதன்படி, அவருக்கான உணவுகள் ஹெலிகொப்டர் ஊடாக கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லப்படுவதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளன.


இந்த நிலையிலேயே, அந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும், குறித்த நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும், விமானப் படையின் ஊடகப் பணிப்பாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமரின் புதல்வருக்கு கொரோனா தொற்று என வெளியான தகவல் தொடர்பில் விமானப் படையின் ஊடகப் பணிப்பாளர் விளக்கம் !! ; பிரதமரின் புதல்வருக்கு கொரோனா தொற்று என வெளியான தகவல் தொடர்பில் விமானப் படையின் ஊடகப் பணிப்பாளர் விளக்கம் !!    ; Reviewed by Madawala News on November 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.