றிஷாத்தின் விடுதலை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகும்.



அஸீம் கிலாப்தீன்
அநியாயமாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது

செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எமது தேசியத்தலைமை றிஷாத்பதியுதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டமை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றிஷாத் பதியுதீன் கடந்த செப்டம்பர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 25.11.2020 பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அமீர் அலி விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்களுக்காகவும் மக்களின் உரிமைக்கும் போராடிய, சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் குரலாக நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் ஓங்கி ஒலித்த றிஷாத் பதியுதீனை அநியாயமான முறையில் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்து அடைத்தமை மனுநீதிக்கு முரணான செயலாகும்.

கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பாராளுமன்றம் வர அனுமதி வழங்கப்படும் நிலையில், எந்தவித குற்றமும் செய்யாத அநியாயமான முறையில் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு புலிப்பாயங்கரவாதிகளால் துரத்துயடிக்கப்பட்ட மூன்று தசாப்தங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படலாமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடிய ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைமைக்கு கிடைத்த பரிசு சிறை வாழ்க்கையாகும்.
எப்போது சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு செய்யப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தினதும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினதும் ஆதரவினைப் பெற்ற றிஷாத் பதியுதீனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

With Best Regards

Kilabdeen Azeem Mohammed

றிஷாத்தின் விடுதலை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகும். றிஷாத்தின் விடுதலை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகும். Reviewed by Madawala News on November 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.