ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுக் திட்டம் தோற்கடிக்கப் பட்டது.



ஏ.பி.எம்.அஸ்ஹர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள 
பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுக் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள்து.

பொத்துவில் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான ‌வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் நேற்று தோல்வியடைந்துள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று காலை கூடிய போது வரவு செலவுத் திட்டம் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீதால் முன் வைக்கப்பட்டது

இவ் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து அவருடைய கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் மக்கள் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னனியின் ஒரு உறுப்பினரும். ஒரு சுயேட்சை உறுப்பினரும். ரீவிஏயின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர் இதனால் 21 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததினால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுக் திட்டம் தோற்கடிக்கப் பட்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுக் திட்டம் தோற்கடிக்கப் பட்டது. Reviewed by Madawala News on November 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.